என் கனவின் பிம்பமாய்
நான் கண்டெடுத்த முத்தாய்
என்வாழ்வின் விடிவெள்ளியாய்
உதித்த உயிரானவனே
அங்கங்கள் சிலிர்த்திடும்
காதல் உணர்வுகளைக்
கனிமொழிகளில் நிதமும்
திகைத்திடச்செய்தாய்
என் மன்னவன் நீயென்று
மதியில் நிலைத்திருந்தாய்
உனையன்றி உலகமே
சூனியமாய் உணரச்செய்தாய்
காலக் கோலனால்
கண்ணாளன் உனைப்பிரிந்து
காத்திருப்பை சுகமாக்கி
உன்நினைவுகளே மூச்சானது
எம் மனங்கள் உணர்ந்த
உடல்கள் சந்தித்திராத
சந்தோசக் கோடுகள்
கைசேரும் நாள் வந்தது
மங்கலம் பாட மணாளனாய்
உயிரே வருகிறாய் என்றிருக்க
வானுர்தியோடு நீயும்
அமங்கலச் செய்தியானாய்
உயிரறுந்த செய்தி கேட்டு
உடல்பிரிந்த உயிர்தேடி
எனை மறந்த பிரம்மையாய்
அலையவிட்டுச் சென்றாயே..
நான் பெற்ற வரமானவனே
உன்னால் இழந்த வசந்தங்களை
மடியும் வரைத் தேடுகிறேன்
கிடைப்பாயா? எனைச்சேர்வாயா?
10 comments:
சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
அருமை வாழ்த்துகள்
@யாதவன்
சுடும் போது சாப்பிடாதீர்கள்
சுட்ட சோறு சாப்பிடுங்கள்
சுடாத சோறும் சாப்பிடாதீர்கள்
சுட வைத்து சாப்பிடுங்கள்
@யாதவன்
நன்றி நண்பா
Nice
@சசிகுமார்
நன்றி நண்பா
வரம் தராத வசந்தங்கள்... வரம் தரும் வசந்தங்களாய் மாறவேண்டும் அவளுக்கு....
உங்களின் கவிதை எங்களுக்கு வரம்தான்....
@தஞ்சை.வாசன்
மிக்க நன்றி நண்பா கண்டிப்பாக உங்களதும்தான்
வரம் தராத வசந்தம்.. வரம் பெற்று விடும் அழகான தன் கவிநயத்தால்.
@ஆதிரா
மிக்க நன்றி அக்கா தங்கள் வரிகளில் இதுகேட்பதிலும் என் கவிதை வரம் பெற்றதாகிவிடும்
Post a Comment