எங்கும் காதல்
எதிலும் காதல்
உயிராய் அவதரித்தால்
காதலை சுவாசித்திட வேண்டுமே
காதலில்லா வாழ்வும்
அன்பில்லாக் காதலும்
மனிதனுக்கே உரித்தான
அற்புத உணர்வன்றோ..
மரணமே இல்லாக்காதலை
இழப்பதாக உணர்ந்து
நீ - மரணித்து விட
காதலை குற்றம் சொல்கிறாய்
யார் விட்டகன்றாலும்
யாவரும் எதிர்த்திட்டாலும்
உன்மனதில் காதல்வாழும்
மீண்டும் உயிர்பெறும்
நிலையற்ற வாழ்கையில்
நிலையான காதலோடு
நிலைப்பதுதான் வாழ்க்கை
இதை மறந்த நீயும்
காதலை வாழவைக்க
வாழ்வோரை சாவடித்து
காதலை வெற்றி பெற
காதலிக்க நாடுகிறாய்
7 comments:
அருமை நண்பரே....
"நிலையற்ற வாழ்க்கையில்
நிலையான காதலோடு
நிலைப்பது தான் வாழ்க்கை"
என்னை கவர்ந்த வரிகள்...
வழமைபோல் சுப்பர்
அருமை நண்பரே....
@பிரஷா
மிக்க நன்றி தோழி தங்களின் தொடர் ஊக்கம் மகிழச்செய்கிறது
@யாதவன்
நன்றி நண்பா
@சசிகுமார்
மிக்க நன்றி தோழா தொடர் வருகையில் ஆனந்தம்
பிறந்த நாம் இறந்துதான் ஆக வேண்டும்... அதற்காக மரணத்தை எண்ணி தினம் சாதல் கொடியது...
அதுபோல்... காதல் என்பது பிரிவு, வருத்தம் தான் தரும் என்று தெரிந்திருந்தாலும்... காதலிக்க மறந்தால் மனிதனாக பிறந்தது அர்த்தமற்று போய்விடும்...
மரணமில்லா காதல் எல்லோரின் வாழ்விலும் நிலையாய் நிலைத்திட வேண்டுகிறேன்...
தங்களின் கவிதை அருமை... வாழ்த்துகள்
Post a Comment