பருவமுனை அடையுமுன்
காதலெனும் மாயைக்குள்
கட்டுண்டு கைசேதம்
தேடிக்கொண்டாய் பெண்ணே
உனையீன்ற தாயவளுடன்
உனை ஏந்திய நேசர்களை
துச்சமென தூக்கி எறிந்து
துணைஒன்று - தானே தேடினாயே
தந்தை உலகமென்பாய்
அவர் மனதில் நீயென்பாய்
உன்னாசை தீர்த்திடவே
அவர்மனதை தீயிட்டாய்
காதல் களியாட்டத்தில்
வெற்றி ஒன்று காண்பதற்காய்
நேற்று அடைந்தவனை
உலகமென நீகொண்டாய்
வாழ்க்கை எனும் அத்தியாயத்தின்
துவக்கத்தையே துயர்களுடன்
துவக்கி விட்டு - உன்னால்
நிம்மதியும் கண்டிட முடிகிறதா..
உயிராய் உள்ளவர்களை
உயிரோடு புதைத்து விட்டு
மணல் வீடும் கட்டிவிட்டாய்
மழைவருமென்று அறியாது..
உற்றாரும் உறவினரும்
உளமாற வாழ்த்தி - உனை
மணாளன் கைசேர்க்கும்
மங்கல நாளை வெறுத்துவிட்டாய்
தப்பற்ற காதலை
தவறாக புரிந்துகொண்டு
உறவுகளற்ற உறவினை
முடிவாக ஏந்திவிட்டாய்
விடிவது பெருநாளென
புத்தாடை தருவித்து
விடியலுக்காய் காத்திருக்க
விடியாத பொழுதுகளாய்
மாற்றிவிட்ட பாவியாய்
அத்தனை சந்தோசமும்
அகற்றிவிட்டுச்சென்றாயே..
தாய்மையாய் நீ மாறி
இத்தீயினை நீ மிதிக்க
அன்று உணரும் பொழுதில்
இன்றைய உன்தாய் வேதனை நீயடைவாய்
நீ நினைத்த காதலும்
உனை உணர்த்தும் நாட்களில்
உனக்காதரவு நீ மட்டுமாய்
தத்தளிப்பதை உறிதியாக்கினாய்
இக்கவிதை மனக்கவலையின் வடுக்களாக உருவானது, உண்மைச்சம்பவம்
காதலை வெல்வதற்கு மற்றவர்களை நோகடிக்காது எம்மை திருத்தி அமைத்துக்கொள்ளல் சிறப்பெனக்கொள்கிறேன்.
காதல் எச்சந்தர்பத்தில் எதிர்கொள்ளும் என்பது யாராலும் சொல்லமுடியாத ஒன்றுதான் அதற்காக எம்மை பெத்து வளர்த்து ஆளாக்கிவிட்ட உறவுகளை உதறித்தள்ளிவிட்டு காதலை வெற்றி கொள்ள நாடுவது சிறப்பாகாது
அதே நேரம் பிள்ளைகளின் ஆசைகளை கருத்திற்கொண்டு பெற்றோர்கள் வழிநடத்துவார்களாயின் இருசாராரும் நலம் பெறலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்
இவ்வரிகளின் ஊடாக ஒரு செய்தியை உணர்த்த நாடினேன். அது, அறிமுகமான புதுமுகத்துடன் செல்ல நாடும் நீங்கள் ஏன் எமக்காக உயிரை பிழிந்தெடுக்கும் பெற்றோர்களை மதித்து அவர்கள் மனதை வெல்ல முடியாமல் போகிறது அதனையும் வென்று உங்கள் காதலையும் வென்று பாருங்கள் சூபீட்சமான எதிர்காலம் அமைந்துவிடுமே.......
9 comments:
சுப்பர் கலக்கிடிங்க
நல்ல இருக்கு
நீங்கள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள் படிக்க இனிமை............
தலைப்பே அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
@சசிகுமார்
நன்றி நண்பா
@யாதவன்
மகிழ்ச்சி நண்பா
@THOPPITHOPPI
மிக்க மகிழ்ச்சி தோழரே
தோழரே கவிதையும் விளக்கமும் நன்று...
காதல் என்னும் மாயை மானிடர்களை ஆட்டி படைத்துக்கொண்டு...
திருமணத்திற்கு முன்னும் பின்னுமாய் இன்றைய காலகட்டத்தில்...
@தஞ்சை.வாசன்
மிக்க நன்றி தோழரே தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
அருமை நண்பா..சூப்பர் இருந்தும் பெண் குழந்தையின் தகப்பன் அல்லவா நன்றாக தோன்றும் அனைத்தும்..
@Mufeesahida
நன்றி நண்பா உங்களுக்கும் பிறப்பது பெண்ணாகட்டும்
Post a Comment