இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, November 27, 2010

சந்தி சிரிக்கிறது....


அந்தோ பரிதாபம்
அங்கே........ பார்...
அனியாயமொன்றுண்டு
அழுகிறார்கள் கூடிநின்று

அவனும் துரத்தித்துரத்தி
காதல் வலை வீசினானாம்
அவளும் அதில் மயங்கி
ஓடிவிட்டாள் அவன்பின்னே


ஒப்பாரி வைக்கிறார்கள்
பெத்த மனம் கலங்கிறதாம்
எப்படியெல்லாம் வளர்த்த பிள்ளை
ஏனிப்படி ஓடிவிட்டாள்

ஊரில் உள்ளவரெல்லாம்
ஓடிவந்து விசாரிக்க
துக்கம் தொண்டையடைத்து
தாழாமல் அழுகிறாளே....

பரவிய செய்தி கேட்டு
ஊர் முழுதும் சம்பாசனை
தலைகுனிந்த தந்தைமனம்
தரம் கெட்டதாய் அழுகிறது

நகரம் கண்டிராத
கிராமத்தின் தலையெழுத்து
ஒட்ட வீரர்கள்
காலத்துக்குக் காலம் ஓடுகிறார்கள்

அம்மா ஓடினாள் என்று மகளும்
அக்கா ஓடினாள் என்று தங்கையும்
அண்ணன் ஓடினான் என்று தம்பியும்
ஒட்டப்போட்டி நடக்கிறது..

காதலை வெல்வதற்காய்..
ஓடிவிட்ட உங்களைப்பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறதே உலகம்
ஏன் அதை மறந்து விட்டீர்கள்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

சசிகுமார் said...

arumai

சிந்தையின் சிதறல்கள் said...

@சசிகுமார்

மிக்க நன்றி நண்பா

எம் அப்துல் காதர் said...

நல்லா இருக்கு!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

சந்(த)தி சிரித்தாலும்.. ஓட்டம், தொடர் ஓட்டங்களாய். சுற்றும் உலகு என்பதனால் நில்லாமல் சுற்றிக்கொண்டே...

உங்களின் சிந்தனை அருமை... வாழ்த்துகள் நண்பா...

சிந்தையின் சிதறல்கள் said...

@எம் அப்துல் காதர்
மிக்க நன்றி தோழரே...

சிந்தையின் சிதறல்கள் said...

@தஞ்சை.வாசன்


மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

fgfdg said...

அருமை அருமை அனைத்து வரிகளும் அருமை.பெற்றவர்களை மறந்து செல்பவர்களுக்கு இது ஒரு எடுத்துக் காட்டாக இருக்கட்டும்..அபாரம் நண்பரே..இன்னும் தொடருங்கள்..நன்றி.

saja said...

பொய்கள் மட்டுமல்ல நிஜங்களும் கவிதையாகிறது!
Jmeel M Saja
www.senseforu.blogspot.com

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...