பெண்ணே நீயும்
ஒற்றைக்காலில் ஒய்யாரமாய்
நிறுத்தாது நிதானமாய்...
நீயாடக்காரணம் கூறாயோ....
அழகுச் சிலையே....
உன்னையும் சிறைபிடித்து
அதிரும் இசைகொடுத்து
ஆடச்செய்த நிகழ்வெது...
வல்லவன் ஆடவனை
அழகென்ற ஆயுதத்தினால்
உயிரைவதைத்து உருக்குலைத்து
அடிமையாக்கும் உன்செயலோ...
மிருதுவான அன்பெய்து
சாதுவான மனங்கொய்து
சஞ்சலம் கொடுத்தவனை
சமாதியாக்குகிறாயே
இதுதான் உன்நீதியோ
வென்றாய் இவ்வுலகை
வேறென்ன வேண்டுமென
இல்லை வெற்றிக் கழிப்பான
மகிழ்ச்சியின் ஆடலிதுவோ..
ஒற்றைக்காலில் ஒய்யாரமாய்
நிறுத்தாது நிதானமாய்...
நீயாடக்காரணம் கூறாயோ....
அழகுச் சிலையே....
உன்னையும் சிறைபிடித்து
அதிரும் இசைகொடுத்து
ஆடச்செய்த நிகழ்வெது...
வல்லவன் ஆடவனை
அழகென்ற ஆயுதத்தினால்
உயிரைவதைத்து உருக்குலைத்து
அடிமையாக்கும் உன்செயலோ...
மிருதுவான அன்பெய்து
சாதுவான மனங்கொய்து
சஞ்சலம் கொடுத்தவனை
சமாதியாக்குகிறாயே
இதுதான் உன்நீதியோ
வென்றாய் இவ்வுலகை
வேறென்ன வேண்டுமென
இல்லை வெற்றிக் கழிப்பான
மகிழ்ச்சியின் ஆடலிதுவோ..
8 comments:
NICE
நல்ல கவிதை.
படத்துக் கவிதை பொருத்தமா
அழகாயிருக்கு ஹாசிம் !
@சசிகுமார்
thanks
@KANA VARO
நன்றி நண்பா
@ஹேமா
மிக்க நன்றி அக்கா
அழகியின் ஆடலுக்கு ஏற்ற வரிகள்...
பாவையின் உள்ளத்தையும் சித்தரிக்கும் வகையில்...
வாழ்த்துகள் நண்பரே...
@தஞ்சை.வாசன்
மிக்க நன்றி தோழா....
Post a Comment