சமூகத்தின் தலைவனென்று
உம்மையும் மண்றமேற்றிட
இரவுபகல் தூக்கம் மறந்தவன்
தொண்டனென்று மார்தட்டி
கோசம் எழுப்பி கொடிபிடித்தவன்
முகவரியொன்று தலைவன்பெற்றிட
விலாசங்களேயற்று பயணித்தவன்
தலைவனையொருவன் வைகிறானென்று
தக்கபாடம் புகட்டியவன்
தாணைத்தலைவா
உன்வழியே என்வழியென
தவமிருந்தவன்
மாற்றானின் கல்லெறியை
தலையிலேந்தி கவசமானவன்
சிம்மாசனம் ஏறிய தலைவனைப்பார்த்து
மெய்சிலிர்த்த உண்மையாளன்
ஏழை என்னிலையும்
தலைவன் தலைவனென்று
செத்து மடிந்தாயே
என்னபயன் நீகண்டாயென
எள்ளிநகையாட்டந்தான்
உன்பின்னே நானிருந்தும்
தகுதிகள் பலயிருந்தும்
தக்கதொழில்யாதுமற்று
தரணியெங்கும் அலைகிறேன்
வயிற்றுப்பசிதான் பொறுத்திடுமா
வருடங்கள் பலகடந்தும்
கிடைத்திடாத வெகுமதிகளோடு
விரக்தியின் உச்சத்துடன்
இளந்துவிட்ட வயதுகளும்
அடைந்துவிட்ட இன்னல்களும்
வெறுப்பிற்கு வித்திட்டது
இருந்து இறப்பதைவிட
இறந்து சிறந்திட நாடினினேன்
வேண்டாத உலகை
வெறுத்த தொண்டனாய்
மரணம் துணைவந்தது
இவ்வாறான ஒரு தொண்டனின் மரணம் எனை கலங்கச்செய்தது
அரசியலில் ஈடுபாடுடைய கோடிக்கணக்கான இளைஞர்கள் இவ்வாறு தவிக்கிறார்கள் சரியான வழிகாட்டலில்லாமல்
இப்படியானவர்கள் மறுமையிலாவது நலம் பெறட்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
10 comments:
மிக மிக மிக மிக அருமை ஹசீம் வாழ்த்துக்கள்.
NANRAGA ULLATHU..
@சசிகுமார்
மிக்க நன்றி நண்பா என்றும்போல் ஒடிவந்து வாழ்த்திவிட்டுச்சென்றீர்கள்
என்றும் உங்களன்பிற்கு நானடிமை
@Thangarajan
தங்களின் வருகையிலும் கருத்திற்கும் என்மனமார்ந்த நன்றிகள்
VERY GOOD POEM..
@Riyas
மிக்க நன்றி நண்பா
அரசியல் படுத்தும்பாடு சொல்லமுடியாது.... தொண்டர்கள் படும் அவலநிலைகளை அருமையாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துகள்...
அந்த தொண்டனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...
நண்பா இன்று தான் தங்கள் தளத்திற்க்கு வருகிறேன்..கவிதைகளும் அதற்கேற்ற படங்களும் அருமையாக உள்ளது..தொடருங்கள்..
@தஞ்சை.வாசன்
மிக்க நன்றி தோழா உண்மைதான் தங்களின் தோழ்கொடுக்கும் பண்பினால் என்றும் சந்தோசமே
@ஹரிஸ்
மிக்க நன்றி நண்பா தங்களைப்போன்ற நல்ல உறவுகள் என்னைச்சேர்ந்தமையில் எனக்கு என்றும் ஆனந்தம்
இவ்வாறு தட்டிக்கொடுத்ததில் தளிர்விடுகிறேன் என்னாளும்
Post a Comment