வாழும்போது உணர்ந்துபார்
தியாகங்கள் பல செய்து
திடம் பெறுவாய் நிலைத்து
பசிக்கின்ற நிலைதனிலும்
உணவின்றி காத்திருந்தாய்
தீயவழி நாடாது தியாகியாய்
நல்வழி தேடுகிறாய்....
தன் உயிரும் துச்சமென
நாட்டுக்காய் போராடி
உயிர்நீத்த செம்மலென
தியாகியாய் நிலைக்கிறாய்
விட்டுக்கொடுக்கின்ற
உன்னத பண்பினைக்கொண்டு
தயாகம் செய்வதில்தான்
உயரிய வாழ்வும் அடைந்திடுவாய்
தியாகத்திருநாள்தான் ஹஜ்பெருநாள் இறைவனின் கட்டளையினை ஏற்று இப்றாகீம்(அலை) தன் மனைவி மகன் குழந்தை இஸ்மாயீலை(அலை) பாலைவனத்தில் விட்டுச்சென்ற சம்பவங்களை ஒட்டியதாக ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது தியாகம் நினைவுகூரப்பட வேண்டிய ஒரு விடயமாதலால் இவ்வரிகள் அமைக்க நாடினேன்.
8 comments:
தியாகத் திருநாளுக்கு ஏற்ற கவிதை!!
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!!
அழகிய கவிதை.தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
nice
அழகிய வரிகள்.. வாழ்த்துக்கள்
@எம் அப்துல் காதர்
மிக்க நன்றி தங்களுக்கும் உரித்தாகுக
@ஸாதிகா
மிக்க நன்றி சகோதரி
@சசிகுமார்
மிக்க நன்றி தோழா
@பிரஷா
மிக்க நன்றி தோழி
Post a Comment