அனாதரவாய் கைவிட்டதில்
அகம் அழுகின்ற குறைபாடாய்
அல்லலுறும் பிஞ்சுகளின்
அவலம் தீர்ப்பாருண்டா
கண்களில் ஏக்கத்துடன்
கவலையின் உச்சத்தில்
கதிகலங்கும் இன்னிலையினை
கருணையுள்ளம் நோக்கவில்லை
வீதியை வீடாக்கி
மடியினை மெத்தையாக்கி
கவலையற்ற மறு உறவை
உறங்கிட செய்த செல்லக்குணம்
பெற்றவரை நோவதா
பிறந்த உலகை நோவதா என
பிற்காலம் வெல்வதற்காய்
நீந்துகின்ற பாலகன்
இதுபோன்ற செல்வங்களால்
இவ்வையகம் நிறைந்துவிட
சொல்பவனும் செய்யாது
செய்பவனுக்கு வழி செய்யாது
விரண்டோடுகின்ற சமூகம்
விதியின் விளையாட்டில்
வீதியியே விதி என்று
வெந்தழுகின்ற மழலைகளை
வேரோடு அறுத்தெறிய வேண்டாமா?
8 comments:
நிறைவான கவிதைகள் நிறைஞ்சிருக்கு ஹாசிம்.முன்னுள்ள இரண்டு பக்கங்கள் பார்த்தேன்.சில கவிதைகள் மனசுக்குள் பாரமாய் இறங்கிவிட்டது."உயிகாக்க ...உண்ணாநிலை"அருமை.ஒரு நாடகத்தைக்கூட கவிதையாக்கிவிட்டீர்கள்.
// பெற்றவரை நோவதா
பிறந்த உலகை நோவதா என//
பிறந்த இனத்தை நோகவேணும் ஹாசிம்.
மிக்க நன்றி ஹேமா தங்களின் வருகையும் அற்புதமான தட்டிக்கொடுப்பும் இன்னும் ஊக்கமளிப்பவையாக இருக்கிறது மிக்க நன்றி
சமுதாயப் பார்வை கொண்ட கவிதை.. உணர்வு மிக்க வரிகள்... ..
very good
hm nandraga irukkurukkiradhu ungal kavithai.
மிக்க நன்றி செந்தில் தங்களின் மறுமொழிக்கு
நன்றி யாதவன்
மிக்க நன்றி ஹரிணி தங்களின் வருகை ஆனந்தமாக இருக்கிறது
Post a Comment