வறண்ட வயதுகளிங்கு
வெருண்டோடுகிறது
வாலிபத்தின் அந்தமும்
முதிர்வின் தொடக்கமுமாய்
வயதுகளுக்குள் போராட்டம்
சாதித்தவைகளைத் தேடி
சோதிக்கும் நாட்களாக்கி
விடைதேடும் வேதனையில்
இழந்தவைகளின் பட்டியல்
இறந்தாலும் தீரந்திடாது
சுடர்விடும் மெழுகாய்த் தானுருகி
சொந்தங்களுக்கு சுகமளித்தபோதும்
சுற்றும் முற்றும் சுவர்களின் நடுவில்
சுகமின்றித் தணலாய் எரிகிறது மனம்
கட்டியவளையும் காத்திருக்கச்செய்து
தொட்டில் கண்மணிகளையும்
எதிர்பார்த்திருக்கச்செய்து
திருப்த்தியற்ற வாழ்வில்
நிதமும் திண்டாட்டந்தான்
உலகத்து ஜனனத்தில்
கணக்கிடப்படாத வயதுகளை
கருத்திலெடுத்து என்னபயன்
உள்ள காலம் வரை - அனைவரதும்
உளம் மகிழ வாழ்ந்திடணும்

