விழிபிதுங்கி நிலைதடுமாறி
வியர்வை நிலத்தில் சிந்த
கொட்டும் மழையிலும்
எரிக்கும் வெயிலிலும்
உழைப்பை மூலதனமாக்கிய
உத்தம வர்க்கம் நீங்கள்
காடுகளாய் கற்காளாய்
படைக்கப்பட்ட உலகை
சொர்க்க பூமிகளாக்கி
சொப்பன வாழ்வளிக்கும்
உயரிய படைப்பாளிகள் நீங்கள்
தொழிலாளியாய் உங்கள் பரிணாமத்தில்
அடைந்த துயர்களைத் துச்சமாக்கி
பிறர்வாழ்வின் உச்சத்திற்காய்
தன்நிலை நொந்தேனும்
துணிந்து நிற்கும் மாவீரர்கள் நீங்கள்
தேசங்கள் கடந்தும் தேடியலைந்து
நாசங்களைக் கண்டும் நடுங்காது
புத்துணர்வுடன் புதியதோர் நிலைக்காய்
கற்றுத்தேறி கால்பதித்து
கண்ணியமாய் தொழிலமைத்து
சம்பாதிக்கின்ற சத்தியவான்கள் நீங்கள
சரித்திரங்களின் நாயகர்களாய்
அரியதோர் யுகம் அமைத்து
அரியணை முதல் அடுக்களைவரை
அத்தனையும் உங்களால் உருவானதே
நாளைய சுவனத்திலும் நீங்களாக
பிரார்த்திக்கிறேன்.
