இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 16, 2013

நானுமோர் குழந்தைதந்தைக்கென்றொரு தினம் 
கொண்டாடுகிறதொரு உலகம் 
என்னுலகில் நான்... காணாத தந்தைக்கு 
கொண்டாடுவதால் என்ன பயன் 

அப்பாவி ஒரு பெண் தப்பாகி 
வம்பாக ஒரு பேறுகண்டு 
ஈன்றுவிட்டாள் இரக்கமின்றி 
மறந்துவிட்டாள் என் தந்தையினை 

கைவிரல் பிடித்து கதைகள் பல பேசி 
விளையாட்டு பொம்மைகளும் 
வீரவசனக் கதைகள் என 
தந்தைவழிப் பாசமெனக்கு 
சித்திரத்தில் கண்டதுண்டு 

என் சரித்திரத்தில் தேடுகிறேன் 
தந்தையாக வாசமெனக்கு 
தந்தவர்கள் யாருமில்லை 
தரித்திரனாம் தரணியில் 
நானுமோர் குழந்தை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Seeni said...

ulukkiyathu ...


arumai...

Ramani S said...

அனாதைக் குழந்தைகளின்
மனப்புலம்பலை இதை விட நேர்த்தியாக
மனம் வலிக்கும்படியாக்ச் சொல்வது கடினமே
தந்தையர் தின சிறப்புப்பதிவு வெகு சிறப்பு
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...