நெருங்கும் வயதுனக்கு நாற்பது
நொந்தழும் உன் மனதுக்கெங்கே ஆறுதல்
கன்னி கழிந்திடாத் துயருனக்கு
காலங்கடந்த ஆறுதல் வரிகளுமுனக்கு
உன்விதியின் வழியா இன்நிலை
சமுகத்துயரா இக்கொடுமை
சரித்திரத்தில் நிலைக்கின்றாய்
சமுகத்தின் வடுவாய் இன்றுன்நாமம்
எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள்
முதுகெலும்பற்ற வாலிபர்களின்
சீதனச் சந்தையில்
மனங்களை யார்தான் தேடுகிறார்கள்
உன்குற்றமெதுவென்று நானுந்தான் தேடினேன்
பிறப்பால் சகோதரிகள் ஏழென்றாய்
அழகால் உனைவெல்ல யாரென்றேன்
அன்பான உனையடைய ஆளிங்கு தானில்லையே
இறுதிவரை இப்படியே இருந்துவிட்டு
மரணமதை எய்திட வேண்டுமென்றாய்
என் உணர்வுகளலெல்லாம் அப்படியே
செயலிழந்ததை நீயறியாய்
நீயறிந்த என்நிலையில்
நான் செய்திட ஏதுண்டு
சமுகத்துக் குற்றவாளியாய்
உன் நீதி மன்றத்தில் நானுமுண்டு
தீர்ப்பின் அதிபதியாம் இறைவன்
நல்வழியொன்றைக் காட்டிடட்டும்
0 comments:
Post a Comment