இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, August 27, 2014

வெற்றியாளர்கள் நீங்கள்


மனிதாபிமானமுள்ள மனங்களெல்லாம் 
உலகெங்கும் அழுகிறது உங்களுக்காய் 
உங்கள் கண்ணீர்களை துடைத்தெறிங்கள் 
துவண்டு வீழ மட்டும் துணிந்திடாதீர்கள்


தரைமட்டமாகின்ற வீடுகளும் 
தாரைவார்க்கப்படும் செல்வங்களும் 
குமிந்து கிடக்கிறது சுவனத்தில் 
உங்களை வரவேற்றுக் கையளித்திட


யுத்தமிது இஸ்லாமியத்திற்கெதிரானது  
அவர்களை வென்றாலும் 
அவர்களை வெல்வதற்காய் மடிந்தாலும் 
ஈருலகத்து வெற்றியாளர்கள் நீங்கள் அப்பாவி அவலைகளைக் 
கருவிலே கருவறுக்கும் 
சாத்தானிய இஸ்ரேலியர்களுக்கு 
சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது 

உலகத்து அரக்கர்களும்

வால்பிடிக்கும் எம்மவர்களும் 
மறுமையின் நீதிமன்றில் நிறுத்தப்டுவார்கள் 
கொழுந்து விட்டெரியும் நரகம் காத்திருக்கிறது 


அந்தோ பரிதாபம் 
உலத்து இஸ்லாமியனே விழித்தெழு 
உன் சகோதரன் அழிக்கப்டுகிறான் 
உன் கரங்களை ஏந்தி 
இறைவனிடம் ஒப்படைத்துவிடு 


உலகின் திசைகளெல்லாம்
பலஸ்தீனப் பாலகர்களின் 
பரிதாப அலறல்களும் மரணங்களும் 
ஒலித்தவண்ணமிருக்கிறது
முடிவு ஏக இறைவனிடமே 


மாந்தர்கள் மறைந்து 
மனித சாத்தான்கள் வாழும் காலமிது 
மரணம் ஒருமுறை மட்டுமே 
அதுவே அனியாத்திற்கெதிராய் 
அடைந்தேனும் சுவனம் எய்திடுவோம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

ரூபன் said...

வணக்கம்

நல்ல விடிவு காலம் விரைவில் மலரும் எழுதிய வரிகள் மனதை உலுக்கியது.. இதைப்போன்றுதான் ஈழத்து உறவுகளின் வாழ்வும்... அவர்கள் வாழ்விலும் விடியல் பிறக்கட்டும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...