இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, February 27, 2016

காதல் சாம்ராஜ்யம்..... பாகம் 02வேண்டுமொரு துணையெனக்கு 
காதல் வேதனைகள் தீர்த்திடத்தான் 
சாதலானாலும் என்னோடு 
சேர்ந்தே கடந்திடணும் 

காதலென்ற பவணியெனக்கு 
வாழ்வாக அமைந்திடணும்
இவ்வழியில் எனைத்தொலைத்து 
புலம்புவதற்கு நாடவில்லை 

கண்டவுடன் காதலென்கிறாய் 
உன் கருணையின்னும் காணவில்லை 
காதலில் நான் கனியும் வரை 
காதலொன்றும் தேவையில்லை 

காதலென்று கைபிடித்தவன் 
கழட்டிவிட்டு சென்றுவிட்டானாம் 
நொந்தவளும் தூக்கிலிட்டு 
மாய்த்துவிட்டாள் தன்னுயிரை 

பொல்லாத காதலெனக்கும் 
பொல்லாப்பாய் மாறிடுமோ 
பொங்கும் என் காதலையும் 
பொத்திவைத்து காக்கின்றேன் 

சிறப்பான ஒருவனென்று 
திறம்பட அறியும் வரை 
கற்சிலையாய் இருந்தாலும் 
காதலை மட்டும் ஏற்கமாட்டேன் 

                                                                               தொடரும்.......பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...