இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 3, 2012

கற்பை பறித்த காதல் வாழுமா...???


தேன் சொட்டும் வார்த்தைகள் 
நம்பிக்கை தரும் நடத்தைகளென 
மயக்கும் மந்திரங்களுடன் 
மங்கையே உனைக்கவர 
மன்னவனாய்த் தொடர்கிறான் 

நீ சிந்தித்திருந்த கட்டுப்பாடுகளையும் 
பயந்திருந்த எதிர்காலத்தினையும் 
துச்சமாய் உனக்கறிவித்து 
துணிவுடன் வலை வீசுகிறான் 

காதலென்ற காந்தமெடுத்து 
இரும்பாயிருந்த உனைக்கவர்ந்து 
சுற்றமும் மறந்திடச்செய்து 
சில்மிசங்களில் உனையாழ்த்தி 
அவனைத்தொடர வசியம் செய்கிறான் 

பெண்ணே நின்று நிதானித்துக்கொள் 
அற்பம் அவனின் ஆசைதீர்க்க 
பணயமுன் கற்பைக்கேட்கிறான் 
அவனின் கழிவகற்றும் (குப்பைக்)
கிடங்காய் மாற்ற நினைக்கிறான் 


உன் மீது அன்பென்று உரைத்தவன் 
உடல்மீது ஆசைகொண்டதெதற்கு 
வைத்த அன்பிற்கு வெகுமதியின்றி 
காதலுக்குத் துரோகம் நினைக்கிறான் 


உரிமையுனை ஆக்காது 
உடலைக் கொள்ளையடிக்கிறான் 
வெற்றிகண்டுவிட்டதில் வேறிடம் 
செல்லத் துணிகிறான் 
பறிகொடுத்து பரிதவிப்பது நீயாகிறாய் 

அன்புச் சகோதரி.......
அன்னிய ஆடவனின் கைகோர்த்த நீ 
தனிமையில் அவனுடன் பயணித்த நீ 
தொடுகைக்கு அனுமதி அளித்த நீ 
உன் வரம்புகளைக் கடந்து
மதியையும் மனதையும் மழுங்கச்செய்தாய் 


உனை அடைந்தவன் மணந்திடான் 
உனை மணப்பவன் அடைந்திடான் 
தூக்கமின்றித் தெழிந்து கொள் 
துயரமின்றித் தொடர்வாய் 
காமத்தையும் காதலையும் 
அடையாளங்கண்டு கொள் 
கயவனைத் தூர வைத்துக் கொள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

செய்தாலி said...

சொன்ன யார் உறவே கேட்கிறார்கள்
பட்டால் தான் உணர்கிறார்கள்

நல்ல கவிதை

Seeni said...

nalla karuthu uraikkumpadi....

திண்டுக்கல் தனபாலன் said...

///// உன் மீது அன்பென்று உரைத்தவன்
உடல்மீது ஆசைகொண்டதெதற்கு
வைத்த அன்பிற்கு வெகுமதியின்றி
காதலுக்குத் துரோகம் நினைக்கிறான் /////

உண்மை வரிகள் நண்பரே !

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வைர வரிகள்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...