ஒடுகிறாய் ஓடுகிறாய்
எதைத்தேடி ஓடுகிறாய்
உன் வாழ்நாளில் எதுவரை ஓடுவாய்
நீ பயந்த உன் எதிர்காலம்
உன்னை துரத்துகிறதென்று
உன்னால் முடியுமட்டும் ஓடுகிறாயா??
துர்ப்பாக்கிய சாலியாய்
துயர்களைக் கண்டும்
துன்பங்களைக் கண்டும்
துயில் கொள்ள இடம்தேடி ஓடுகிறாயா??
இல்லை நிம்மதி வேண்டுமென்றும்
நிலையான சுகம் வேண்டுமென்றும்
வேறுலகில் கிடைப்பதாய் கண்ட
கனவின் பின்னால் ஓடுகிறாயா??
நீ கோளையென்ற ஏளனப்பார்வையுடன்
உன் உடமைகளும் உயிர்களும்
உன் நிலை நினைத்துக் கேலிசெய்கிறது
அவைகளைவிட்டு எப்படி ஓடுகிறாய்??
ஓடிவிடத்தான் முடிந்ததா??
உன் பாதிவழியில் மீதமிருக்கிறதே
பாதையிலெங்கும் படுகுளியுமிருக்கிறதே
இதற்காகவா இத்தனை தூரம் ஓடிவந்தாய்
எதிர்த்து நில் ஏறெடுத்துப்பார்
துணிந்து நில் துயர்துடைத்துப்பார்
ஓட மறந்து நின்று ஜெயித்திடுவாய்
மனதின் பாரங்களும் மதியின் சுமைகளும்
உன்னைத் துரத்தியதென்று உணருவாய்
2 comments:
unmai sako!
arumai!
உற்சாகமூட்டும் வரிகள்... வாழ்த்துக்கள் !
துணிவே துணை ! நன்றி நண்பரே !
Post a Comment