இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 12, 2012

நீயும்...அனாதையாவாய்.


மங்கிப்போன மனிதநேயங்களின் 
அறுவடையில் விழைநத மாணிக்கங்கள் 
புழுதி படிந்து கிடக்கிறது 
பொழுது விடிந்தும் விடியாத வாழ்வுடன் 
வீதியில் இன்னும் உறங்கிக் கிடக்கிறது 

தாயின்றிய தளிர்கள் 
தரைகொடுத்த மடியில் 
தன்னை மறந்து துயில
பெற்றவரம் பசியின் கொடுமையோ 
கருணையின்றிய மானிடமோ

பஞ்சணை தரமறுத்த உலகில் 
நெஞ்சணை கிடைத்ததே என்றும் 
ஆரத்தழுவ மறந்த உலகில் 
அதரவளித்தேன் என்றும் 
பரிமாறிக்கொண்ட பாசங்களிங்கு 

கிழிசல்களும் கீறல்களும் நிறைந்து 
கற்களிலும் முட்களிலும் படர்ந்து 
கழிக்கின்ற வாழ்வுக்கு நிகர்தேடும்
நிர்க்கதியான ஜென்மங்களுக்கு 
நிளல்களிலேனும் இடந்தாருங்கள் கிடைத்ததைக்கொண்டு திருப்த்தியின்றி 
பறப்பதற்குத்துணியும் மனங்களின் ஆட்சி 
இன்றய மனிதர்களையெல்லாம் 
மிருகங்களாய் மாற்றி 
மனிதங்கள் இறந்து கிடக்கிறது 

நாளுந்தோறும் நடக்கின்ற பாதையில் 
நலிவுற்றோரும் நடைப்பிணங்களும் 
நிரம்பிக்கிடக்கிறதே மனிதா.... உன் 
உளம் திறந்து உதவநீயும் முன்வருவாயா...?

உனைத்துரத்தும் மரணம் 
உன்னருகில் நெருங்கிவிட்டது 
நீ உணருமுதல் உனையடைந்தால் 
உலகமே உமக்கெதிரியாகிவிடும் 
அன்று நீயும்  அனாதையாவாய் 

ஆங்காங்கு காணும் அனாதைகளை 
ஆதரிக்கத்தவறும் அகங்களால்தான் 
ஆலம் முழுதும் அனர்த்தங்களின்
அழிவுகள் எமை  நாடிவருகிறது 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...