இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 17, 2012

தப்பாகியது காதலா.......???


முறுக்கேறிய இளமைக்கு 
முதுமையின் அறிவுரை புரிவதில்லை 
விடலையவன்(ள்) வீழ்ந்துவிட்டான்(ள்) 
காதலெனும் சமுத்திரத்தில் 

துடுப்புள்ள உறவுகளுக்கு 
துணைகொடுக்கத் தெரிவதில்லை 
தீயது காதலென்று தீய வார்தைகளால் 
எரித்திடுவார்கள் எரிந்து......


நீ காதலிக்கிறாயா? துணை கண்டாயா? 
என்ற கூக்குரலில் தலைகுனியச் செய்து
தளும்புகளால் கோலமிட்டு 
வம்புகளால் வெறுக்கச்செய்து 
தேடிய துணை நாடி 
திரும்பிடச் செய்தல் முறையோ 

கிடைக்காத ஆதரவுகளால் 
கிடைத்த காதலை ஏற்றதில் 
துரோகிகளாய் மாற்றப்படும் 
தளிர்களோ ஏராளம்.....ஏராளம் 

பருவமது இளமையானதில் 
தப்பொன்று நடந்திருந்தாலும் 
தவறெங்கள் நடவெடிக்கையில் 
தரங்கெட்ட குழந்தையென 
ஒதுக்கிவிடல் தகுமோ.....

முள்ளில் வீழ்ந்த சேலையினை 
முள்ளறியாது அகற்றியிருந்தால் 
முளைத்த காதலும் வேரின்றி 
மறைந்துவிடும் மகிழ்ந்திடலாம் 

பிள்ளைகளென்று தூர நிறுத்தி 
எதிரிகளைப் பார்ப்பதுபோல் நடத்தி 
வேசமுள்ள பாசங்களால் 
வென்றிட முடிவதில்லை - எம்
பிள்ளைக் காதலை.....!!!!

முதல் காதலர்களாய் பெற்றோரிருந்து 
சந்தேகங்களைச் சரிசெய்யும் 
துணைவர்களாய் மாறி 
தோளில் கைபோட்டு நடந்துபாருங்கள் 
தூரத்துக் காதலர்கள் 
தூரத்தே நின்றிடுவார்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Seeni said...

mmmk....

atumai...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...