இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, January 10, 2013

றிசானாவின் மரணம்......நடந்தேறியதற்குத் தண்டனையடைந்து
புனிதவதியாய் மரணமெய்தினார் றிசானா
வாக்களித்த இறைவன்
சுவனமதை உறுதியாக்கினான்.

விளைநில இவ்வுலகில்
விதைப்பவைகளால் சுவனமெய்துவது
மனிதவாழ்வின் நோக்கமல்லவா
றிசானாவும் வென்றுவிட்டார்
நாட்டமிது இறைவனது
யார் நாடினும் தடுத்திருக்க முடியாதது

இறைவனின் மார்க்கம்
எமக்களித்த கட்டுப்பாட்டை
யார் மீறினும் எமக்கு
தண்டனையுண்டென்பதை மறந்து
எதிர்வாதமிட்டு பாவியாய் நாமாவதா...?

றிசானாவின் மரணம்
ஆயிரமாயிரம் றிசானாக்களின்
வாழ்க்கையை படம்போட்டுக்
காட்டியிருக்கிறது....
கண்மூடியிருந்த சமூகமும்
காசுக்கலைந்த தரகர்களும்
எத்தனை றிசானாக்களை
உருவாக்கிவிட்டிருக்கின்றனர்

அப்பாவியாய் ஆதரவற்றிருந்ததில்
வறுமைநிலை வயிற்றுப்பசிக்காய்
கடல்தாண்டிய பயணத்தில்
துர்ப்பாக்கிய சாலிகள் இந்த றிசானாக்கள்

மார்க்கம் கற்றுத்தரும்
பெண்களின் பாதுகாவலைத்துறந்து
தன்னந்தனிமையில் தத்தளித்து
துணை தேடி துயில மறந்த
றிசானாக்களும் அதிகமதிகம்

பரிதாபம் என்று காணாத
பாதகர்களின் கையிலகப்பட்டு
கற்பிழந்து உழைப்பிழந்து
கண்ணீர் வடிக்கின்ற
றிசானாக்களைக் காத்தவருண்டா

அரேபிய தேசத்தில்
அடிமைகளாய்க் காணும்
றிசானாக்களை அடித்து
அவமதித்து காமவெறிக்கும்
களியாட்டங்களுக்கும்
தயாரித்தவர்கள்தான் எத்தனை எத்தனை

அத்தனையும் அடகுவைக்கப்பட்ட
சட்டங்களும் கண்மூடியிருக்கின்ற
அரசுகளும் அறிந்திடாத உறவுகளுமே
பொறுப்பாளர்களாகின்றனர்
மாறவேண்டியவர்கள் இவர்கள்தான்

இந்த றிசானாவின் மரணத்தோடு
இனி எங்கும் றிசானாக்கள் உருவாகாது
பாதுகாப்பது எம் சமூகத்தின் கையிலுள்ளது
இதைவிட்டுவிட்டு வீரவசனம்
மார்க்கத்திற்கெதிராக பேசிகிறோம்

நாளைய எம் வாலிபர்களுக்கு
சீதனமற்ற வாழ்வைக் கற்றுக்கொடுங்கள்
உள்ளதைக்கொண்டு வாழப்பளக்குங்கள்
இன்றய றிசானா நாளை எம் சமூகத்தில்
உருவாகமல் தடுப்பது மட்டுமே
கற்றுக்கொள்ளும் பாடமாகிறது
குறிப்பு : அன்புச் சகோதர்களே முடிந்தவரை றிசானாவின் குடுப்பத்தினருக்கு உங்களாலான பொருளுதவிகளையும் செய்து விடுங்கள் அவர்களுடைய வறுமை நிலை போக்கிட பணஉதவிகளை ஏற்பாடு செய்யுங்கள் நல்ல மனம் படைத்த கொடை வள்ளல்கள் உலகம் முழுவதும் பரந்து கிடக்கின்றனர் சமுகத்தளங்கள் வாயிலா உண்மைக்குண்மையான தகவல்பரிமாற்றங்களுடன் றிசானாவின் பாதுகாவலரது வங்கிக் கணக்கிலக்கங்களை வெளியிடுங்கள் அதன் மூலமாக உதவிகள் அடைந்து அவர்களுக்கு விமோட்சனம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது இதை விட்டுவிட்டு 
வீணான கோசங்களும் விதண்டாவாதங்களோடும் மார்க்க விடயங்களை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம். றிசானாவின் தண்டனையை யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இதை மார்க்க விடயமாக பார்க்க வேண்டும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Seeni said...

unmaithaan sako..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...