இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 20, 2013

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!எங்களின் விசங்களின்னும் 
சேகரிக்கப்படுகிறது...........
எம்மைச் சீண்டியும் தீண்டாத 
பொறுமையாளர்களென - இன்றே 
கற்றுக்கொடுக்கிறோம் பாடமவர்களுக்கு 

இதுதான் இஸ்லாமியமென 
வெறுப்பவர்களையும் வியந்திடவும் 
பார்ப்பவர்களைக் கவர்ந்திடவும் 
பக்குவம் காத்திருக்கிறதெம் சமுகம் 

ஆங்காங்கு உசுப்பிவிடப்படும் 
உணர்வுகளுக்கு விலங்கிட்டு 
உள்ளத்தால் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் 
சந்தர்ப்பம் ஏற்பட்டால் 
துணிந்து சஹீதாவதற்காக......

இறைவனின் மார்கமது இஸ்லாம் 
அவனே காத்திடவல்லவன் 
பொறுமையாளர்களின் அதிபதியவன் 
பொறுமைகொண்டு காத்துநிற்கிறான் 
என்றும் விழிப்போடிரு என் வாலிபனே 
எம் சமுகத்தின் காவலும் எம்கையில் 
துச்சமெனத் துணிந்து அறிவற்றவரின் 
நாசவலையில் சிக்கிவிடாதே......

நாங்களே உங்கள் வழிகாட்டிகளென 
மேடைகளில் முழங்கிய தலைமைகள் 
பேடிகளாய் அடங்கிட்ட மாயமெதுவோ....
எம் சாடல்கள் அவர்ளுக்கெதிராகவே - காரணம் 
உரிமையிருக்றது எங்களுக்கு 

நாளை தேர்தல் வரும்வரையா 
நீங்கள் மௌனித்திருக்கிறீர்கள் அல்லது 
சமுகத்தினை சாவுவரை அழைத்துச்சென்று 
சமாதிகட்டுவதற்கா தீர்மானித்திருக்கிறீர்கள் 


நாலாபக்கமும் நாதாரிகள் கூட்டம் 
நாசம் செய்கிறதெம் சமுகத்தை 
நாதியற்றவர்களாய் மௌனித்து 
நாடிநிற்பது எதுவென்றேனும் 
விளக்கித்தான் கூறுங்களேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Seeni said...

arumai sakotharaa....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...