இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, March 9, 2013

எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!ஆண்டாண்டு காலம் அனுபவித்த
யுத்தமெனும் இருளை நோக்கி
மீண்டும் நடைபோடுகிறதெம் தேசம்

வேண்டாமென்று வெருண்டோடுவோரையும்
வேதனையென்று விலகிநிற்போரையும்
வக்கிரம் செய்து வதைக்கிறார்கள்

அப்பன் அம்மையென்றும்
அக்கே நங்கியென்றும்
அன்னியோன்யம் காத்திருந்த
சமுகமொன்றை சிதைத்து
சுக்குநூறாக்கி சிதறச்சொய்கிறார்கள்

நாடு என்று தன் உயிரிலும் மேலாக
நேசிக்கின்ற சமுகமொன்றை
அன்னியமாய் சித்தரித்து
நாசவலையில் சிக்கிவிடத் துடிக்கிறார்கள்

அன்னிய தேசமெல்லாம் ஒன்றுகூடி
தேசத்தை நாசம் செய்ய விழைந்த போது
இஸ்லாமிய தேசங்கள் திரண்டு
கைகொடுத்த சம்பவங்கள் மறந்து
இஸ்லாமியனுக்கெதிராகவா
அனியாயம் செய்கிறீர்கள்மதத்திற்காய் உயிர்மாய்த்திடத்துணியும்
மார்க்கத்தில் பிறந்தவர்கள் நாங்கள்
இறைவனுக்கே பாடைகட்டுவதாய்
உங்களுக்கு நீங்கள் பாடையமைக்கிறீர்கள்
உங்களை தூவம்சம்செய்திடப்
போதுமானவன் இறைவன் ஒருவனே

இஸ்லாமியனாய் இலங்கையில் பிறந்த
எங்களின் நோக்கம் என்ன தெரியுமா??
இலங்கையை ஒரு தாயெனக்கொண்டதால்
மண்ணில் மலர்ந்தவர்களெல்லாம் குழந்தைகள்
எங்களுருமை எங்களுக்கும் வேண்டும்
மறுத்திடும் உரிமை உங்களுக்கும் இல்லை

மூத்த சகோதரனாய் உமைக்கருதி
கேட்டுநிற்கிறோம் மன்றாடி வாழ்கிறோம்
நீ குட்டிய போதெல்லாம் தலைகுனிந்து
ஏற்பது எதனால் தெரியுமா எம் தாயின்
நிம்மதிக்காய் மாத்திரம்

எங்களை மீண்டும் மீண்டும் சீண்டி
வேண்டும் வேண்டும் என்று கேட்டு
தீயை வாரிக் கொட்டிக்கொள்ளாதீர்கள்
நாசமாகி நாதியற்றுப்போவீர்கள்

மீண்டுமொருமுறை வேண்டாமென்று 
எச்செரிக்கிறோம் அமைதியாக 
அகிம்சை எங்கள் வழியின் நியாயம் புரிந்து 
எம் தேசத்தையும் வாழவிடுங்கள் 
நிம்மதியாக..................

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்று தணியுமோ இந்த அநியாயங்கள்...

Seeni said...

arumai sako...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...