இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 13, 2013

வேரோடு அறுத்திடுவோம்.........


ஹலாலாய் உண்ணக் காபீரிடம் அனுமதி 
கேட்கவேண்டியவர்களாய் நாங்கள் 
ஏக இறைவன் என்றோ எமக்களித்த 
வரயறைகளை மறந்ததால் 
விழைந்த அறுவடைகள் இவை.....

யாவரும் கூக்குரலிட்டனர் 
அனைவரும் அடங்கிவிட்டனர் 
ஹலாலெதுவென்று தேடக் 
கண்ணாடி வேண்டுமெமக்கு......

ஹலாலே இல்லை இனியென்றதும்  
பட்டாசி வெடித்தனராம் அவர்கள் 
எங்களிதயங்களை பத்தவைத்து 
எரிமலைகளாய் ஆக்கிகிறார்கள் 

அன்று... வணங்கிய தளங்கள் 
இன்று.. உண்ணுகின்ற உணவுகள் 
நாளை.... உடுக்கின்ற உடைகளென 
தொடரும் இவர்களின் வேட்டைகளால் 
தொடரவிருப்பதுதான் எதுவோ........???


அரசியலாலும் ஆசைகளாலும் 
அடிமைகளான தலைவர்களின் 
அலட்சியப் போக்குகள் 
எம் சமுகத்தை சிதைத்திடப்போகிறதோ...???

அடங்கிவாழும் எம் சமுகம் 
என்றோ ஒருநாள் தாளாமல் துவண்டு 
தூக்கிவிட்டால் எம் வாளை 
என்னவாகும் எம்தேசம்........???

விளிப்பீர்களா வேங்கைகளே 
வீரவசனம் பேச்சில் வேண்டாம் 
எம் எச்சிலையும் பார்த்து உமிழுங்கள் 
விளிப்புணர்வு இன்று தேவை 
ஒற்றுமைக்கு வித்திடுங்கள் 

முஸ்லிம் என்ற ஒரு கட்சியில் 
இன்றே அணிதிரளுங்கள் 
வேண்டாம் எதிலும் பாகுபாடு 
வேற்றுமை வளர்ப்போரை 
வேரோடு அறுத்திடுவோம் - இன்றே 
வேரோடு அறுத்திடுவோம்........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒற்றுமை இருந்தால் எல்லாம் நடக்கும்...

Seeni said...

veera maana kavitha..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...