காதல் காதலென்று
இதயம் துடிதுடிக்கிறது அதில்
உன் நினைவும் ஒருசேர
காதலிங்கே உயிர்பெறுகிறது
உன்னுள் இல்லாத காதலை
என்னுள் விதைத்த நீ
காதலுக்கே சமாதிகட்டுவதுபோல்
உன் காதலை ஏன் மறைத்துவிட்டாய்
உன்னைக் காணும் போதெல்லாம்
உள்ளம் ஒரு நிலையில் இல்லையெடி
கண்ட மாத்திரத்தில் கட்டியுனை
கடத்திடத் துடிக்கிறதென் மனம்
கவலையின்றிக் காரமின்றி
காதலற்ற பாசமென்று
பதட்டமின்றிக் கூறிச்சென்றாய்
பரிதாபமாய் என் காதலை - உனக்காகப்
பாசமாக்கிக் கொண்டேன்
2 comments:
ஏக்கத்துடன் வரிகள்... முடிவில் // உனக்காகப்
பாசமாக்கிக் கொண்டேன் // அருமை...
ada...
Post a Comment