இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, August 19, 2015

வென்றிருக்கிறோமா தோற்றிருக்கிறோமா

இஸ்லாமியச் சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் 

வென்றிருக்கிறோம் என்று மார்தட்டி மகிழ்வதா? தோற்றிருக்கிறோம் என்று அழுவதா என்று குமுறுகின்ற மனதுடன் சில விடையங்களை சுட்டிக்காட்டிட விளைகிறேன். பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வழிகாட்டலில் வியுகங்கள் வகுத்து வெற்றி நோக்கி பயணிக்கின்ற நாம் அவர் காட்டி நின்ற ஒற்றுமை என்னும் கையிற்றை விட்டும் செல்கிறோம் என்பதுதான் இன்றைய வேதனையான விடையமாகியிருக்கிறது. 

அஷ்ரஃப் அவர்கள் கண்ட கனவை இன்று திகாமடுள்ள மாவட்டத்தில் நிஜமாக்கியிருக்கிறோம் அதே வேளை பல இடங்களில் தோற்றமைக்கான காரணம் என்ன என்பதை அவதானிக்க வேண்டிய கடமைப்பாடு அத்தனை போராளிகளுக்கும் இருக்கிறது 

ஒரு காலத்தில் பல கட்சிகளாக பிரிந்து நின்று இரண்டு அல்லது முன்று ஆசனங்களை மாத்திரம் பெற்றுவந்த தமிழ்சமுகம் கடந்த  10-15 வருடங்களாக ஒற்றுமையை நிலை நாட்டி வேற்றுமையகற்றி வென்று நிருபித்து வருகிறார்கள் அவர்களின் ஒற்றுமையின் வாயிலாக இந்த தேர்தலிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். வாழ்த்துகிறோம் அவர்களை 

அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னர் சின்னா பின்னமாக்கப்பட்ட முஸ்லிம் சமுகமாகிய நாம் வென்றும் தோற்றவர்களாகத்தான் வெந்து கொண்டிருக்கிறோம். ஒரே குர்ஆன் ஹதீஸ் என்னும் ஓரிறைக் கொள்கையின் வாயிலாக வாழுகின்ற எம் மத்தியில் ஒரு தலைமைக்குக் கீழ் ஒன்றுபட முடியாமல் அனைவரும் தலைவர்களாக அனைவரும் ஆட்சியாளர்களாக மாறுவதற்கு ஒரே சமுகத்தில் முண்டியடித்துக்கொண்டு அற்ப அரசியலுக்காக உயிரைக்கூட மாய்க்கின்ற கேவலமான அரசியலை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம் வெட்கமாக இருக்கிறது. 

பல கட்சிகளில் பிரிந்து நின்று நான்கும் ஐந்துமாக நீங்களெடுத்து மாற்றுச் சமுகத்தின் வெற்றிக்கு வழிவகுத்து நிற்பதை விட ஒன்று பட்டு மொத்தமாக வென்றிருக்கலாமே என்பதுதான் எங்களது ஆதங்கமாக இருக்கிறது. 

ஒவ்வொரு தோல்வியிலும் படிப்பினை இருக்கிறது வெற்றியிலும் ஆழுமை இருக்கிறது அவற்றை ஆய்ந்து வளப்படுத்துவதன் ஊடாகத்தான் எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். 

முஸ்லிம் சமுகத்தவராகிய நாம் ஆங்காங்கு வென்றிருந்தாலும் மொத்தமாக தமிழ் சமுகத்தோடு ஒப்பிடுகின்றபோது தோற்றுத்தான் இருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை 

இலங்கை நாட்டினுள் முஸ்லிம்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரே சமுகத்தவர்தான் அவ்வாறே அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்பட்ட ஒரு சமுகமாக மாறும் காலம் இனிமேலாவது வருமா?? இது பற்றி இன்றிறிருக்கின்ற அத்தனை தலைவர்களும் சிந்திப்பார்களா?? எதிர்காலத்தில் சுயநலங்களை தள்ளிவைத்துவிட்டு சமுகத்திற்காகவும் இறைவனுக்காகவும் ஒற்றுமைப்படுவார்களா?? என்பதுவே அனைத்து உணர்கவாளர்களும் கேட்டுக்கொண்டிருக்கின்ற இன்றய கேள்விகள் 

ஒன்றை மட்டும் தெளிவா புரிந்து கொள்ளுங்கள் தலைமைகளும் சமுகப்பொறுப்புகளும் இறைவனால் அமானிதமாக வழங்கப்பட்டிருக்கிறது நாளை இறைவனின் கேள்வி கணக்குகள் காத்திருக்கிறது அவனின் பிடி பயங்கரமாக இருக்கும் அனைத்தையும் உதறித்தள்ளி இனிமேலாவது வெற்றியிலும் தோல்வியிலும் ஒன்றுபடுவோமா????? 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...