இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, October 8, 2015

மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)


மழலை உன் சொற்களில்
மயங்குகின்றேன் கண்ணே... என்
மனதிற்குச் சுமையாய்
கனக்கிறது உன்வார்தைகள்

விளையாட்டுக் காட்டிவிட்டு
விட்டுவிட்டுச்சென்றாய் என்று
அங்கலாய்பில் அழுகிறாய் நினைத்து
என்னுயிர் பிரிந்தது போல்
நானும் அழுகிறேனிங்கு

என் தடங்களைத் தடவிப்பார்த்து
தந்தை முகம் தேடுகிறாயென்று உன்
தாய் மொழியில் கேட்டு நான் தவிக்கின்றேன்
இத்தரணியில் நாம் பெற்றவரம் இதுதானோ.....

கடந்த பெருநாட்களைக் கடிந்து
என் வரவில் பெருநாள்க் காணக்
காத்திருக்கும் செல்லமே...
என் நிலைகொண்டு நொந்தழுகிறேன்

மரணம் எமை பிரித்திருந்தால்
மறந்திடுவாய் ஒரிரு நாட்களுக்குள்
தினம் தினம் மரணமிப் பிரிவால்
மகிழ்வின்றித் தவிக்கிறாய்....

எமைப்படைத்த இறைவனிடம் மாத்திரம் 
இருகரமேந்தி நில் எம் போன்ற துயர் 
இனியாருக்கும் கொடுத்திடாதே என்று 
வல்லநாயன் வழிசெய்யட்டுமெம் வாழ்வுக்கு.....குறிப்பு : என்னைப் போன்று குழந்தைகளைப்  பிரிந்து தவிக்கின்ற அத்தனை தந்தையினருக்கும் இக்கவிதையினை சமர்ப்பிக்கிறேன்.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...