இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, December 19, 2015

இரண்டாம் உயிருக்கொரு வாழ்த்து


கவிஞர்களின் மன்றில்
கவிதைகளின் அலங்காரங்கள்
வார்தைகளின் ஜாலங்களால்
கோலமிடுகிறோம் கவிதைகளாய்

உனக்கென என் உள்ளத்தில்
கவி வரிகளாய்த்தான் ஊற்றெடுக்கிறது
வாழ்த்தவொரு சந்தர்ப்பமெனக்கொண்டு
வரிகளமைக்கிறேன் வாழ்க வென்று

பாலமுனைக் கவித்தாய் பெற்றெடுத்த
இளவல் நீ என்று மகிழ்கிறாளெம்தாய்
உனை ஈன்றதாயின் இறுமாப்பில்
உணர்வுகளும் அஸ்தமித்திருக்கும்
நலமாய் வாழ “அமீர் மூமினையும்” வாழ்த்துகிறேன்

சிந்தும் உன் சிந்தனைகளை
செதுக்கியதால் கவிதைக் கருவேற்று
இன்று “இரண்டாம் உயிர்” என்று
கையில் குழந்தையாய் பிரசவித்திருக்கிறாய்

நீ யாகிய முதலாம் உயிர்
ஈன்றிருக்கும் கவிதைகளின் தொகுப்பை
மற்றொரு உயிராய்க் கொண்டிருப்பாய் போலும்
இவ்வுயிரும்  பேறுகளைடைந்திட வாழ்த்துகிறேன்

பாலமுனை பாறுக் ஆசுகவி அன்புடீன் - என
முத்தாய் எம் முன்னோடிகளின் வழியில்
பல கவிச் செல்வங்களின் சேமிப்பில்
சொத்தாய் சேர்கிறாய் நீயும்  - வாழ்க பல்லாண்டு

கல்வி உணர்வாளனாய் உம்பயணத்தில்
கவிதை எனும் ஆயுதமுன் கையில்
எம் சமுகத்துக் களை பிடுங்க
கூர்மையாக்கிடு உன் கவிதைகளை 

பாலமுனை பஸ்மில் என்றிருந்தாய் 
இன்று பாவலர் பஸ்மிலாய் உன் அவதாரம் 
கவியுலகில் என்றும் புலவராய்த் திகள 
பெருமையுடன் வாழ்த்துகிறேன் 

நீ செல்லும் பாதையில் 
நானும் இருக்கிறேனென்று மகிழ்கிறேன் 
உன்பாதையில் என்றும் வெற்றிகளை 
இறைவன் தந்திட இருகரமேந்துகிறேன் 
வாழ்க வாழ்க ஈருலக வெற்றியோடு வாழ்க 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

நிஷா said...

கவிதை நூலுக்காய் எழுதப்பட்ட வாழ்த்துக்கவிதை அருமை ஹாசிம். நீங்கள் எப்போது வெளியிடப்போகின்றீர்கள்.டுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கலாமா?

haseem hafe said...

@நிஷா

மிக்க நன்றி அக்கா மிக விரையில் வெளியிடலாம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...