உலகக் காதலர்களின்
உரிமையான கூக்குரல்
ஒலித்திருக்கிறது ஓரிடத்தில்
காதலை எதிர்ப்போருக்கு
தூக்குமேடை காத்திருக்கிறதாம்
காதல் ஒரு பாவமென்றும்
காதலர்கள் பாவியென்றும்
காலாகாலம் எழுப்பிய ஒலிகளுக்கு
சாவுமணி அடிக்கிறார்களாம்
தன்மனம் ஏற்றவனை/(ளை)
தன்நிலை சரிகண்டு
காதலித்துக் கரம்பிடிக்க
எத்தனை காலம் தான் போராடுவது
உலக வரைபடத்தில்
மணிக்கொரு காதல் கொலைகள்
சாவுகளின் பின்னணியில்
எதிர்ப்பாளர்களின் சாகசங்கள்
இறந்த காதலர்களின்
காதல்கள் உயிர்பெற
எதிர்போரைத் தூக்கிலிட்டு
எதிர்ப்போருக்கு கற்றுத்தாருங்கள்
காதலொரு பாவமில்லையென்று
ஒரு காதலை எதிர்த்து
இரு உயிர்களைக் கொன்றவர்கள்
நிச்சயமாக பாவிகளே.....ஆதலால்
சட்டம் வேண்டும் இவர்களை தூக்கிலிட
காதலர்களே குரல் கொடுங்கள்
எதிர்காலக் காதல்கள் உயிர்வாழட்டும்
2 comments:
vali puriyuthu!
migavum arumaiyana kavithai. kathalargalukku ithu oru aananda medai..vaazhthukkal..
Post a Comment