இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 5, 2012

பாசத்தின் போர்வலம்......


ஆனந்தமாய் அன்னையோடிருந்தேன் 
கலைத்தெங்களைப் பிரி்த்தவரெவரோ..?
இரு மனங்களுக்கும் கடிவாளமிட்டுக்
கைது செய்து அடைத்தவரெவரோ ??
வெறுக்கப்பட்ட எதிரிகளாய்ப் பாசத்திற்காய்
எங்களுக்குள் போர்வலம் நடக்கிறது

அம்மா வழி காணத்துடிக்கிறேன்
அவளின் மொழிச்சலைக் கேட்கத்துடிக்கிறேன்
அவள் மார்பில் அன்றும் உதைத்திருப்பேனே..
தூக்கி எறிந்து விட்டு தூர இருந்திருப்பாளா??
இன்று செய்த தவறென்னவென்று
உணர்த்தப்படாத குற்றவாளியாய்த்- தாயின்
தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறேன்

உலகத்துத் தாய்களெல்லாம்
பெற்ற குழந்தைகளைப் பேறுகளாய்க் கொண்டு
நாற்செல்வமும் நாளும் தேடி
மனமகிழ்வை நலங்களாய்க் கொடுத்து
தன் மனம் மகிழ்ந்திருப்பார்களாம்



எதிர்மறையானவரய் மாறி
தவறேயற்ற தன் சேயை
தன்னலமுமற்று பிறர் சொல்லுக்காய்
எனை வஞ்சித்து வசைபாடி
வெறுத்தொதிக்கி விட்டிருக்கிறார்
செய்த தவறென்னவென்று
இதுநாள்வரை அறியத்துடிக்கிறேன்

வெம்பும் பிஞ்சாய் வேரின்றிய விழுதாய்
தாயின் அரவணைப்பின்றிய அனாதையாய்
வெற்றிகளிருந்தும் தோல்வி கண்டவனாய்
விடைகளற்ற கேள்விகளோடும்
வெதும்பும் நாட்களோடும் தாய்வரம் பெற்றிட
இறைவன் துணை வேண்டிநிற்கிறேன்

சேயின் நியாயங்கள் சரியென
எம் இருவரினது மரணமும் சேருமுன்
உணருவாயென்று காத்திருக்கிறேன்
உன்னால் நானும் என்னால் நீரும் சேர
யாம் அடையும் சுவனமும்
எமக்காய் காத்திருக்கிறது

மனதளவிலேனும் தெரிந்தும் தெரியாமலும்
குற்றம் செய்திடாதவனென்று உறுதிகூறி
நான் செய்திடாத பாதகத்திற்காய்
இறைவனுக்காக மன்னித்துவிடு தாயே
மாந்தருள் மாணிக்கமாய் இறைவனடி சேர்ந்து
உயரிய சுவனம் நீர் அடைந்திட
என்வாழ்நாளுள்ளவரை பிரார்த்திக்கிறேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Seeni said...

maasha allah!

nalla kavithai!

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...