பிள்ளையாய் வளர்க்கப்பட்டேன்
குலத்தின் விளக்காய்
குடும்பத்தோடு கலந்து மகிழ்ந்தேன்
வயதெனக்கு வந்ததென்று
வரண்கள் பல தேடுகிறார்கள்
வருகின்ற மாப்பிள்ளைகளெல்லாம்
(சீதனம்) மலையளவு கேட்கிறார்களாம்
ஒரு சாண் என்வயிற்றுக்கு
சோறுபோடத்தகுதியற்ற
நொண்டியெனக்குத்தேவையில்லை
மகருக்காய் ஒரு சொல்லேனும்
கற்றுத்தரும் மாந்தரொன்றை தேடுகிறேன்
என்னிடம் பணம்பெற்று
எனக்கவன் உடுத்தத்தேவையில்லை
சீதனம் பத்துலட்சம் வாங்கிவிட்டு
மகரெனக்கு நூத்திஒன்றும் தேவையில்லை
ஹறாமாய் ஆரம்பிக்கும்
இத்திருமணமும் தேவையில்லை
திருநபி கற்றுத்தராத
ஆடம்பரங்களும் விரயங்களும் தேவையில்லை
ஐந்துபேர் முன்னிலையில்
தலைநிமிர்ந்த துணையொன்று தேடுகிறேன்
பக்கத்துப் பாத்திமாவை
காதலித்தவனும் கரம்பற்ற
கைக்கூலி கேட்கிறானாம்
கயவனவன் ஆம்பிளையா வென்று
காறியவள் துப்பிவிட்டாள்
எனக்கு மட்டும் சுகமில்லை
உனக்கும்தான் இன்பமுண்டு
உன்னை நான் வாங்கி அனுபவிக்க
நான் ஒன்றும் அலையவில்லை
ஆண்பிளையாய் நீ இருந்தால்
எனக்கென விலைகொடுத்து(மகர்)
வாங்கிக்கொள் அனுபவிக்க.........
பிறப்பவர்கள் ஹலாலாகி.....
சந்ததிகளை நல்லவர்களாக்கி......
சுவனமதை நமதாக்கிட
ஏன் நீயும் உணரவில்லை.......
என் கன்னி இன்னும் கலையவில்லை
ஆணொருவன் வரும் வரை காத்திருக்கிறேன்.....
5 comments:
maasha allah!
nalla kavithai!
மிக மிக அருமையான பதிவு
பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்த Seeni அவர்களுக்கு நன்றி
சூப்பர் கவிதை கலக்கல் நண்பா...
பளீர் சவுக்கடி கவிதை
நல்ல கவிதையை தந்தமைக்கு நன்றி.
Post a Comment