வருடத்திலெருமுறை உனக்காக
உதிர்கின்ற என் வரிகளில்
தொக்கி நிற்கின்றவைகள்
தொடர்கின்றன இன்றும் .....
அறியா உன் பருவத்தில் - நான்
அமுதமாய் ஒதிய வரிகளை - இன்று
படியென்று கூறிப் பகலிரவாய்
ஆனந்தம் கொள்கிறாய்
அன்று எழுதியவைகள் - உனக்கு
இன்று அகம் மகிழ்விப்பதுபோல்
இனிமேல் ஏற்றுபவைகளும் - உன்
வழியில் விளக்காய் மாறிடட்டும்
உன் சுட்டிக் குறும்புகளுக்கு
சுருக்கிடும் காலமிது - நீ
குமரியாய் ஆனாலும் - என்
சுட்டிக் குழந்தை நீயல்லவா....
உன் பிரிவில் நானடைந்த
துயர்களுக்கு நிகர் தேடுகிறேன்
உன் வயதுகள் மாத்திரம்
என்னை வக்கிரமாய் கர்ச்சிக்கிறது
ஆறு உன் வயதாகி விட்டதில்
ஆறுகிறதென் மனம் - ஏனெனில்
ஆண்டுகள் உனைக் கடந்துவிட்டால்
ஆகிவிடுவாய் அகிலத்து மானிடமாய்
உன் அன்னை மடிதவளும்
உன் உறவினை - ஆரவாரத்துடன்
வரவேற்கக் காத்திருக்கிறாய் - அது
எப்பாலினமானாலும் அன்னியோன்யம்
அணுவளவும் குறையாது காத்துவிடு
பாடசாலை செல்கிறாய்
பல பாடங்கள் சொல்கிறாய்
பக்குவங்கள் உனக்கும் கூடிவர
தேடல்கொண்டுன் அறிவை
தீட்டிக்கொள் கூரியதாய்
அம்மா உன் மடிக்குழந்தையின்று
அப்பா என்றும் உன் உலகமென்று
நட்பாய்க் கைகோர்க்கும்
நல் நாட்கள் எமக்காய் விடிந்ததிடட்டும்
இனியுன் வழியில் மலரும் நொடிகளை
வைரங்களாய்க் கொண்டு
உன் வாழ்வுக்கு அழகு சேர்த்திட
இறைவன் துணை என்றும் அமையவே
இருகரம் ஏந்துகிறேன் இன்று.
2 comments:
// உன் சுட்டிக் குறும்புகளுக்கு
சுருக்கிடும் காலமிது - நீ
குமரியாய் ஆனாலும் - என்
சுட்டிக் குழந்தை நீயல்லவா.... //
Wav.. beautiful lines..
ரசிக்க வைக்கும் வரிகள்...
வாழ்த்துக்கள்...
Post a Comment