இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, October 9, 2013

வெற்றியாளனை வாழ்த்துகிறேன்.....


வென்றுவிட்ட என் தோழனுக்கு 
வாழ்த்தெழுதத் துடிக்கிறதென்மனம் 
வரிகளையும் அவனிடமே 
வாங்கிடுமளவு கவிஞனுமவன் 

நான் பிறந்த மண்ணில் 
மலர்ந்த ஒரு கவிக்குயில் 
இன்று ஜனாதிபதி விருதடைந்த 
பெருமைக்குரிய ஆசான் 

பல்லாயிரம் மைல்களெம்மை 
வகுத்துநின்று பல குறிகள் சொல்கிறது 
ஆறாத எம் நட்பினால் 
மகிழ்கிறதென்னுள்ளம் 

தேசங்கள் கடந்து நான் 
தேடிய வாழ்க்கையினை 
எம் தேசத்தினுள் வாழ்ந்து 
வென்றுவிட்ட வெற்றியாளன் நீ 


செல்வங்கள் பல கோடி தேடியும் 
வெறுங்கை வறட்சியாளன் நான் 
வெற்றிடமில்லா மகிழ்வடைந்து 
வாழ்வில் செல்வந்தன் நீயானாய் 

நாம் தொடர்ந்த பல வழியில் 
பேறுகளடைந்து வென்றாய் 
பேறுகளற்ற வெற்றிகளுடன் 
பாலைவனத்து மண்ணில் 
இன்னுந்தான் தேடுகிறேன் 

உன் ஜனாதிபதி உயர்விருதில் 
எம் ஊர்த்தாயுடன் பல்லாயிரம் 
உள்ளங்கள் மகிழ்ந்து நிற்கின்றன 
எல்லையற்ற என் மகிழ்வில் 
வரிகளை மட்டும் சமர்ப்பிக்கிறேன் 

ஊரவரின் உணர்வுகளுக்கு 
தீனியெங்கு கிடைக்குமென்று 
உயரிய உள்ளத்துடன் தேடி நின்று  
உளமாற வகுந்தளித்தாய் 

சேவைகள் எதுவானாலும் 
சோர்வெதுவும் நீ கண்டதில்லை 
அயராத பாடுபட்டதால் 
அடைந்த வெற்றி அளப்பெரியது 

இக்காலத்தில் வாழ்ந்த 
அரிய சாதனையாளனாய் 
எதிர்காலத்து சந்ததியினருக்கு 
உதாரண கர்த்தாவாய் 
என்றும் நீ திகள 
இறைவனை வேண்டுகிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...