வாழப்பிறந்த வாலிபனே - உன்
வாழ்வை முடித்திட நீ யார் ???
உனக்கே உரிமையற்ற உயிரை
உலகிலிருந்து அகற்றிட நீ யார் ???
பசுமை நிறைந்த வாலிபத்தினை
பண்போடு நடத்தாத அற்ப கோழையாய்
சிறுதுரும்புத் தோல்விகளுக்கும்
சிதைக்கிறாய் உன்னுயிரை
காதல் தோல்வியாம்
கடன்காரன் தொல்லையாம்
வாழப்பிடிக்கவில்லை என்று
பித்தனாய் உயிர் மாய்க்கிறாய்
எதிர்கொள்ள நாதியற்ற
எழியவனே மனிதா
உன் புத்தியால் சாதித்திடாத
பகுத்தறிவை ஏன் மறந்தாய்
தற்கொலைதான் முடிவென்று
உன் மழுங்கிய புத்தி உரைத்தாலும்
சுற்றத்து சுகங்களை நோக்கி
சற்று நீயும் நிதானிக்க வேண்டாமா ??
சன் மார்க்கம் பொதிக்கின்ற
சட்டங்களை வாழ்விலேற்ற
இறைபக்தியற்றவனாய் நீ இருந்ததினால்
உயிர் மாய்த்தால் உமக்கு அற்பமாகிறது
விளைபயிர் உலகமிதில் - எம்மால்
விதைப்பவைகள் மறுமையின் வெற்றிக்காகும்
தற்கொலை நீ செய்ததால் - நீயே
நரகத்தை உரிமையாக்கினாய்
வாழும் மானிடங்களே
வாழப்பிறந்த நாம் வாழ்வை
வாழும் போதே வாழ்ந்திட வேண்டும்
வாழாது வீழ்த்துவோமானால்
வாழ்விலேது ஈடேற்றம்........
2 comments:
கோழைகளுக்கு சரியாகச் சொன்னீர்கள்...
arumai sako..!
Post a Comment