எத்தனை உறவுகள்
என்னோடு தானிருந்தும்
பாசத்திற்காய் மாத்திரம்
ஏங்குகின்ற அனாதை நான்
கோடிகள் கொட்டிக்கொடுத்திருந்தும்
கேடியென்றுரைக்கிறார்கள்
பணமாகிய காகிதம்
அற்பமென்றுணராது
சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்
அம்மாவும் அப்பாவும்
அண்ணனும் நங்கையுமாய்
ஆதரவு என்னாலடைந்திருந்தும்
ஆனாதரவாய் நானிங்கு
தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்
பிணத்திற்குச் சமனான பணத்தினை
மதிக்கின்ற மானிடத்திற்கு
மனிதனுள் தேடும்
பாசத்தினை உணரத்தெரியவில்லை
அரவணைத்து ஆறுதல்
கூறவேண்டிய உறவுகளிடமிருந்து
பாசத்திற்காய் ஏலம்விடப்படுகிறது
பாசத்தின் விலை பணமென்றானதில்
வெறுக்கின்ற மனமிங்கு
பார் துறக்கத்துடிக்கிறது........
1 comments:
வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் நன்றாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment