மகளீர் மாணிக்கங்களை
காத்திடப்பிறந்தவள் நான்
மாதர் குலத்துக் கற்புகளுக்குப்
பாதுகாவலும் நான்
என் கண்மணிகளின் தேகத்தை
மேயவரும் கண்களுக்கு எதிரியானவள்
பார்வைச் சிறைபிடிக்கப்படும் மாதுகளின்
தேகத்தை விடுவிப்பவளும் நான்
எங்கே திறந்து கிடக்கிறதென்று
ஊர்ந்து வரும் கண்களுக்கு
என்னைக் கண்டமாத்திரத்தில்
ஆத்திரம் கொண்டதைக் கண்டிருக்கிறேன்
அழகு சாதனங்களுக்கென கிரயங்களும்
விரயமற்ற நேரங்களுமென
என்னால் என் அரசிகளுக்கு
எப்பொழுதும் வீண் விரயங்களில்லை
கண்களால் கற்பழிக்கப்டாத
உடல் நெளிவுகளின் அழகினை
உரியவனிடமே முழுதாய் ஒப்படைத்திட
முழுக் காரணி நானாகிறேன்
