இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, December 8, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 14)



திருமணவாழ்வுடன் தொடர்ந்து
இருமன மகிழ்வுடன் கலந்து
பல மனங்களின் சங்கமத்தில்
அங்கங்கள் கொள்ளும் சங்கமமே
வாழ்வின் வெற்றி என்று என்மனம்
சில தினங்களில் ஏங்கியதை மறக்கவில்லை

வாலிபத்தின் முதிர்வும்
தனிமைகளின் வெறுப்பும்
ஈர்ப்புகளை ஏந்திக்கொள்ள
வழிசெய்து வகைசெய்ததை
வார்த்தைகளில் மாத்திரம்
மறுத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை உணர்நது என் கரம் பற்றிட
வந்தவர்களுள் மேன்மையானவரென
போராடிய என் மனதிற்கு ஆறுதலாய்
தொடர்ந்தவனின் தொடர்புகள்
அவனைத் திரும்பிடச்செய்ததை
காதலென்று உணர்ந்ததை மறக்கவில்லை

மறுவாழ்வும் கிடைக்கிறது - என்
திருமகளுக்கும் தந்தைவாழ்வு
உறுதியாகிறதென்ற மங்கல நிகழ்வுகள்
மகிழும் தினங்களாக எங்களின்
வாழ்க்கைக்கு வழிசெய்ததை
ஏற்றிருந்ததை மனம் மறக்கவில்லை


அமைதியாய் அலங்காரமின்றி 
நடந்தேறிய மறுமண தினத்தில் 
அனாதைகளுக்கு அன்னதானமளித்து 
அவர்களின் முகத்தின் மகிழ்வுகளோடு 
புதுவாழ்வை புதுப்பித்த தினமதை
புத்துணர்வாய் மகிழ்ந்தேனதை மறக்கவில்லை 

நான் வெறுத்திருந்த வேதனைகள் 
வேரோடு அகழ்கின்றதாய் 
ஆறுதல் கரங்களின் அரவணைப்பில் 
ஆட்பட்டு ஆசுவாசப்ட்டேன்
என் வாழ்விலும் மகிழ்ந்தேன் 
என களிப்பில் மகிழ்ந்ததை மறக்கவி்ல்லை 

எத்தனை துன்பங்கள் என்னையும் தொடர 
உறுதியான போராட்டங்களுடன் 
தடம் புரளாத என் உயரிய நடத்தையின் 
வெகுமானமாய் தாமதித்தேனும் 
தரமான வாழ்வை அடைந்ததாக 
உணர்ந்தேனதை மறக்கவில்லை 

தேகத்தை இரைகளாக்கி இழப்புகளுக்கு 
ஈடுகொடுத்திடத் துணிவோருக்கு 
சாட்டையடியாய் வாழ்ந்து காட்டினேன் 
துணிவின் துணைகொண்டு 
வாழ்க்கையின் இமயம் தொட்டிருந்தேன் 
என்றெல்லாம் இறுமாப்போடு 
நடந்த நாட்களை இன்னும்தான் மறக்கவில்லை 
அவள் அவளாகவே தொடர்வாள்...........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Seeni said...

mmmm..

nalla varikal...

sako...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...