இஸ்லாத்தினைப் பொறுத்தவரை அதன் கோட்பாடுகளுக்கு அப்பால் செயல்பாடாமல் பாதுகாத்துக் கொண்டோமானால் உண்மை முஃமீனாக விளங்க முடியும் எம்மால் முடிந்தவரை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகளில் இருந்து நாமும் தவிர்ந்து நடந்தாலே போதுமானது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்ற வகையில் மீண்டும் இதனை பிரசுரிக்கிறேன்
இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை
- அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது
- சிசுக்களைக் கொல்வது.
- தற்கொலை செய்வது.
- விபசாரம் செய்வது.
- ஓரின சேர்க்கை புரிவது.
- சுய இன்பம் அடைவது.
- மது அருந்துவது, அதை தயார் செய்வது, அதை விற்பது, எடுத்துச் செல்வது.
- திருடுவது.
- பெற்றோருக்கு மாறு செய்வது, அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, சீ என்று அவர்களை சொல்வது.
- போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.
- முஃமின்களுக்கு நோவினை செய்வது, அவர்கள் செய்யாத குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது, அவர்களைக் குறை கூறுவது.
- அல்லாஹ்வுக்கு அதிருப்தியளித்து மக்களை மகிழ்விப்பது.
- ஒப்பந்தங்களை உறுதி செய்தபின் அவைகளை முறிப்பது.
- பெற்றோரை மாற்றிக் கூறுவது.
- நெருப்பால் தண்டிப்பது, உயிர் உள்ள வைகளை, இறந்தவைகளை நெருப்பிட்டுக் கொளுத்துவது.
- இறந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, சிதைப்பது.
- பாவமான, தவறான, அநியாயமான காரியங்களில் பிறருக்கு உதவுவது.
- முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது.
- முஸ்லிம்களுக்கு கெடுதல் விளைவிப்பது, அதற்கு சூழ்ச்சி செய்வது.
- மார்க்கக் கல்வி ஞானமின்றி தீர்ப்பளிப்பது.
- அல்லாஹ்வுக்கு பிடிக்காதவற்றில் பிறருக்கு கீழ்படிவது. (அவர் யாராக இருப்பினும் சரியே!)
- பொய் சத்தியம் செய்வது.
- வீணாக சத்தியம் செய்வது.
- ஒழுக்கமான பெண்களை பழி சுமத்தியவர்கள் தவ்பா செய்து திருந்தவில்லையெனில் அவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்வது.
- அல்லாஹ் அனுமதித்தவைகளை ஹராம் என்று விலக்கிக் கொள்வது.
- ஷைத்தானின் வழிகளை பின்பற்றுவது.
- அனுமதியின்றி பிறர் பேசிக் கொண்டிருப்பதை கேட்பது.
- அனுமதியின்றி பிறர் வீட்டில் நுழைவது.
- தனக்கு சொந்தமல்லாததை தனக்கு சொந்தமானது என்று கூறுவது
- தான் அனுபவிக்காததை அனுபவித்த தாகக் கூறுவது, தன்னிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது.
- செய்யாத ஒன்றைக் கூறி புகழ் தேடுவது.
- இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் ஊர்களுக்குள் செல்வது. (ஆனால் படிப்பினை பெரும் நோக்கத்துடன் அல்லது அழுதவர்களாக அவ்வூர்களுக்குச் செல்வது கூடும்.)
- பாவமான விஷயத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது.
- பிறர் குறைகளை ஆராய்வது.
- நல்ல ஆண், பெண்கள் மீது கெட்ட எண்ணம் கொள்வது.
- பொறாமை கொள்வது.
- குரோதம் கொள்வது.
- உறவுகளை, சமுதாயத்தை புறக்கணித்து வாழ்வது.
- அசத்திய வழியில் செல்வது.
- பெருமை, பகட்டு, தற்பெருமை, அகந்தை, அகம்பாவம், மமதை கொள்வது.
- உலக வஸ்துக்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது.
- பூமியில் பெருமையாக நடந்து செல்வது.
- மக்களை விட்டும் முகத்தை திருப்பிக் கொள்வது. (அதாவது மக்களிடம் பழகுவதை தவிர்ப்பது பெருமையின் அடையாளமாகும்.)
- கொடுத்த தர்மத்தை திரும்பப் பெருவது. (தர்மம் கொடுத்த பொருளை விலைக்குக் கூட திரும்ப வாங்கக் கூடாது.)
- தந்தை தனது மகனைக் கொலை செய்துவிட்டால் அவரைக் கொல்வது.
- பிறரின் மர்மஸ்தானத்தைப் பார்ப்பது. (இந்த சட்டத்தில் ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்களே.)
- பிறரின் தொடையை பார்ப்பது. (அவர் இறந்தவராயினும் சரியே!)
- சங்கைமிகு (ரஜப், துல் கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) மாதங்களின் கண்ணியத்தை பாழ்படுத்துவது.
- கெட்ட வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவு செய்வது.
- தொழிலாளியிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பது.
- பிள்ளைகளுக்கு சமத்துவமின்றி அன்பளிப்பு வழங்குவது.
- வஸிய்யத் செய்வதில் தவறிழைப்பது.
- வாரிசுக்கு வஸீய்யத் செய்வது.