இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 5, 2012

கல்முனைக் கொடியேற்றம்



எமது பிரதேசத்தில் அப்பட்டமான இணைவைத்தலோடு அனாச்சாரத்திற்கு வழியமைத்துத்தரும் ஒர் இடமாக இருந்துவருகின்ற கல்முனைக் குடி கொடியேற்றப்பள்ளி வாசலைப் பற்றி பரவலாக அனைவராலும் பேசப்பட்டுவருகிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவற்றை ஆரம்பிப்பதற்கும் இதை ஊக்குவிப்பதற்கும் ஊரின் மேயரும் உலமாக்களும் ஒத்து நிற்பதுதான் மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கிறது


இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த விடயம் மாற்று மதத்திலிருந்து பரவிய கொடிய நோய்.  பண்டய காலத்தில் பல பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது காலப்போக்கில் திறம்பட இஸ்லாத்தை விளங்கிய ஆலிம்களால் அவை முழுவதுமாக தடுக்கப்பட்டு ஓரளவு ஏனய ஊர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது ஆனால் கல்முனை என்ற மிகப்பெரிய ஊரும் அதன் நிருவாகமும் இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை


அங்கு என்னதான் நடக்கிறது என்று ஆய்ந்து பார்த்தால் அப்பட்டமான அனாச்சாரம் என்றோ மரணித்த ஒரு சாதாரணமான மனிதனின் கபுரைச் சுத்தி மக்கள் வலம் வருவதும் பிள்ளை கேட்டு அங்கு வைக்கப்பட்டிருக்கின்ற எண்ணையினை வயிற்றில் தடவுவதும் குழந்தைகளின் தலைகளில் தடவுவதும் அவர்களுக்கு காணிக்கை என்ற பெயரில் ஆடு மாறு போன்றவற்றை கொடுப்பதும் இன்னும் பல எழுத முடியாத வணக்கங்கள் என்ற பெயரில் இடம்பெறுகிறது



மக்களின் நெரிசல்களிலும் உரசல்களிலும் பத்திக்கொள்ளும் பல கூட்டங்களும் கஞ்சா போன்ற வஸ்தில் மஸ்துவந்த பாவாக்களின் வேடிக்கைகளும் மாத்திரமே இடம்பெற்ற வண்ணமிருக்கிறது ஆனால் ஒரு விடயம் அதிகமான திருமணங்கள் அந்த பிரதேசத்தில் அதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது வருமானம் மாத்திரமே குறிக்கோளாகக் கொண்ட இந்த திருவிழாவை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் 


நிச்சயமாக இறைவனுக்கு மாற்றமாக நடக்கின்ற இந்த விடயத்தினை கட்டாயமாக சிந்திக்க வேண்டிய பொறுப்பில் அனைத்து தலைமைகளும் பொறுப்புதாரிகளும் இன்றய இளைஞர்களும் இருக்கிறோம் என்பதை மட்டும் மறந்திடாதீர்கள் இந்த இடத்திற்கு எமது குடுபத்து அங்கங்களை செல்வதை விட்டும் தடுத்துவிடுங்கள் ஒவ்வொரு வருடமும் இதுபற்றி பேசப்படுவதும் எதிர் வாதங்கள் இடம்பெறுவதும் வழமையாகிவிட்டது கொடி இறக்கம் ஆனதும் இதை மறந்து பழைய நிலை உருவாகிவிடும் இந்த வருடத்துடனாவது இவற்றை நிறுத்துவதற்கு மேயரிடம் பேசி ஊரின் தலைவர்கள் உலமாக்கள் இதில் சிரத்தை எடுக்க வேண்டும் இல்லையேல் நாளை மறுமையில் உங்கள் கையில் கொடுத்திருந்த அமானிதத்தின் பதில் என் ன என்ற இறைவனின் கேள்விக்கு பதிலற்ற துர்ப்பாக்கிய சாலிகளாக இருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை


அவ்வாறு பொறுப்புதாரிகள் கவனிக்காமல் விட்டால் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமாக நடப்பவற்றுக்கு குரல் எழுப்புவோரும் எதிர்ப்போர்களும் மற்றும் அனைத்து உணர்வாளர்களும் ஒன்று திரளுங்கள் இதுபோன்றவற்றை எதிர்ப்பதில் எமது உயிர் நீத்தாலும் நாளை மறுமையில் இறைவன் எமக்கு சுவனமளிப்பான்
ஒருமித்து குரல் கொடுத்தால் இவற்றை அடியோடு அழித்திடலாம். நாளைய எம் சமுகத்திற்கு நல்லதோர் வழியினை இட்டுச் செல்லலாம் தயாராகுங்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...