விருட்சமாய் வேரூன்றி
விழுதினைப் பிரசவித்து
தாங்கும் விழுதுகளைத்
தேடும் வேர்களாய்த் தாய்
வேர்களின் சக்தியில்
உருவம் பெற்றதை மறந்து
வானத்திலிருந்து வீழ்ந்ததுபோல்
நிலத்தையாளத்துடிக்கும்
விழுதுகளாய் பிள்ளைகள்
பட்சிகளும் ஊர்வனங்களுமாய்
பாதியில் கண்ட உறவுகளில்
தனையென்றும் தாங்கும்
வேர்களை நோக்கிடாத
நன்றி மறந்த விழுதுகளங்கு
தன்மீது படர்ந்த தனது
துணையென்று நினைத்து
தன்னோடிருந்தும் உதவியற்ற
விழுதை நினைத்தழுகின்ற
துர்ப்பாக்கிய வேர்களிங்கு
விழுதில் ஊஞ்சல் கட்டியோர்
குதூகலித்தாடுகின்றனர்
வேரை மறுத்த விழுதை நினைத்து
விம்மியழுகிறது வேர்
வீரம் பேசும் விழுதுக்குத் தெரியவில்லை
வேரும் உருகி வீணே இறந்தால்
விரூட்சம் ஆட்டங்கொண்டு
அடங்கி வீழ்வது வீழுதும் தானென்று
0 comments:
Post a Comment