இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, May 2, 2012

தாய் தேடும் விடை

பட்ட மரங்களின் நடுவே
பட்டமரமாய் இத்தாய்
வரண்ட நிலத்துடன்
நா- வரண்ட இத்தாயோ
வேதனை தீர்ப்பாயா ? என்று
வேண்டுகிறாள் இறைவனிடம்


விதியின் விளையாட்டோ
வீணர்களின் விழைவோ 
பேறுகளற்ற பேதையாய்
விடும் கண்ணீருக்கு
விடை தேடுகிறாள்


இது போன்ற
தாயென்ற இத் தங்கங்களை
புழுதியில் புதைத்துவிட்டு
புத்திரர்களாய் வலம் வந்து 
தாய் புகள் மறந்த சேய்களாகிறோம் 


தாய் விடும் கண்ணீரில் மூழ்கி 
தரணியில் வாழ்விழந்து 
தனிமரமாய் நீயும் மாறுமுன்  
தாய்பாசத்தில் நனைந்திடுங்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

தினேஷ்குமார் said...

வயதோடிவிட்டால் தான் அறிவார்கள் இவர்கள்...

செய்தாலி said...

காலம்
சுற்றுவதை சேய்கள் உணர்ந்தால்
எந்த தாய்க்கும் வராது
இந்நிலை

mohamedali jinnah said...

மனதைத் தொடும் அருமையான கவிதை.

என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி!பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
http://nidurseasons.blogspot.in/2009/09/blog-post_05.html

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...