இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, May 24, 2012

றிஸ்வானா அபுபக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்


எனது ஊரின் மீது பற்றும் நான் என் ஊரவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் வீண் பேகவில்லை கடந்த சில வாரமாக ஒரு தர்ம சங்கடமான நிலையொன்று பேஸ்புக்கில் உலவியதை யாவரும் அறிவீர்கள் அதாவது றிஸ்வானா அபுபக்கர் என்ற பெயர் தாங்கிய பேஸ்புக் பக்கம் ஒன்றில் பாலமுனை என்ற எனது ஊரின் பெயர் விலாசமாக இடப்பட்டிருந்தது அதிகமான எனது ஊரைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது நண்பர் பட்டியலில் இப்பெயரை சேர்த்திருந்தார்கள்


திடீரென கடந்த வாரம் முதல் அந்த பக்கத்தில் மிகவும் அசிங்கமான (ஒட்டுத்துணி கூட இல்லாத நிர்வாணமான ) புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது விபரிப்பதற்கே நாகூசும் அளவு மிகவும் வெறுக்கத்தக்க புகைப்படங்களாக இருந்தது இந்த புகைப்படங்கள் எங்களை நண்பர்களாக ஏற்றவர்களெல்லாம் பார்வையிட்டுவிட்டு இது தொடர்பாக கேள்விகளை எங்களிடம் கேட்கலானார்கள் இந்த பிரசுரத்தின் பின்னர் மிகவும் அவமானங்களையும் அவப்பெயர்களையும் எங்கள் ஊர் சம்பந்தமாக சந்திக்க நேர்ந்தது இதன் தொடரில் இதனை ஆராய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம் அதன் வாயிலாக திடுக்கிடும் சில உண்மைகள் தெரியவந்தது அதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையிருப்பதால் இந்தப் பகுதியினை எழுதுகிறேன்


றிஸ்வானா எனும் பெயர்தாங்கிய அந்தப் பெண் பாலமுனையைச் சேர்ந்தவர்தான் என்பதை முதலில் கண்டு பிடித்துக்கொண்டோம் ஆனால் அங்கு பிரசுரமாகியிருந்த புகைப்படங்கள் எதுவும் அந்த பெண்ணுடையது அல்ல எதற்காக இந்த பக்கமும் பிரசுரமும் என்று துருவி அராய்ந்த போதுதான் உண்மை புலப்பட்டது அதாவது றிஸ்வானா என்ற இந்த ஏழைப்பெண்மணி சவுதிக்கு சென்று அங்கு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்திருக்கிறார் அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்த சம்மாந்துறையினை பிறப்பிடமாக கொண்ட கேடுகெட்டவன் அந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் முடிப்பதாக வாக்குறிதியும் அளித்து பணம் நகைகளை அந்த பெண்ணிடமிருந்து பெற்று அனுபவித்திருக்கிறான் இந்த பெண் திடீரென நாடு செல்ல நேர்ந்ததால் இவன் அதைத் தெரிந்து கொண்டு தனக்கு இரண்டாயிரம் றியால் தந்து விட்டு செல்லும் படி கேட்டிருக்கிறான் பணமில்லாத அந்தப்பெண் இவனிடம் அறிவிக்காமலே நாட்டுக்கு திரும்பியிருக்கிறாள் இதைக் காரணமாக வைத்து அந்த பெண்ணின் பெயரில் பக்கத்தினை உருவாக்கி அவளது தொடர்பிலக்கத்தினை இட்டு அவள் உரையாடுவது போலவே உரையாடி இந்த அசிங்கமான பிரசுரத்தினை ஏற்படுத்தியிருக்கிறான் 


இந்த விடயத்தில் எங்களது ஊரை சரியென்று காட்டுவதற்காக மற்றய ஊரை பிழையாக சொல்ல முன்வரவில்லை அந்த ஊரைப் பிறப்பிடமாக கொண்டதாக அவன் சொல்லியிருக்கிறான் அவனது பெயர் ஆசிர் தற்போது ஜித்தா நகரில் வேலை செய்கிறான் இவனுக்கு தக்க பாடம் கற்றுத்தர வேண்டும் அவன் வைத்திருந்த தொலைபேசி இலக்கங்களாக 00966599525942/00966591069867/00966582408686 என பல இலக்கங்கள் கிடைக்கப்பெற்றன இவனை அடையாளங்காண இந்த இலக்கங்கள் உதவியாக இருக்கும் சவுதியில் இருக்கின்ற நண்பர்கள் இவனை அடையாளங்கண்டு பொலிசுக்கு தெரியப்படுத்துங்கள் தேவையான ஆதரங்களை மெயில் மூலம் அனுப்தித்தருகிறோம் இவனது புகைப்படமும் இருக்கிறது விரைவில் பிரசுரிக்கிறோம் இலங்கைக்கு வராதவகையில் பொலிசில் புகார் பதிவு செய்யப்பட இருக்கிறது இவன் கத்தாரில் இல்லாததால் இவன் தப்பித்தான் இங்குள்ள சகோதரர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இவனை விட்டுவிடாதீர்கள் அது மாத்திரமல்லாது அந்த பக்கத்தில் சவுதி அரம்கோவில் பணிபுரிவதாக பதியப்பட்டிருக்கிறது அதிகமாக அவன் தொழில் புரிவது அங்குதான் என்று தெரிகிறது அத்தனையும் அப்பட்டமான பொய்கள் இவ்வாறான பல பக்கங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த அளவு மிகக் கேவலமாக தனது சமுகத்தின் ஒரு பெண்ணுக்கு துணிந்து உலகமே பார்க்குமளவு செயற்பட்டிருக்கின்ற அவனை என்ன செய்தாக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தீர்மானித்துக்கொள்ளுங்கள் 


எங்கள் கண்முன்னே காணும் பல்லாயிரக்கணக்கான பெண்களின் கொடுமைகளை குறிப்பிட்டு வருகிறோம் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை இது நன்றாகவே வெளிநாடுகளில் தொழில் புரியும் ஒவ்வொருவருக்கும் தெரிந்த விடயம் இது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார்கள் பெண்களின் எளிய மனங்களை பலகீனங்களை ஆண்கள் துஸ்பிரயோகம் செய்கிறார்கள் அதுவும் எம் சமுகத்தவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர் இவற்றை நிறுத்துவதற்கு என்ன வழி என்று சிந்தித்தால் தயவு செய்து பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாதீர்கள் அது அனாச்சாரத்திற்கு வழிவகுக்கின்றது சரியான பாதுகாவலற்ற பெண்களின் பயணம் சிறந்ததல்ல பாதுகாவலர்களுடனான பயணங்களையும் தொழில்களையும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள் 


பொதுவாக ஒரு பெண்ணை ஏமாற்ற நினைக்கும் வாலிபர்களே சிந்தித்துப்பாருங்கள் அந்தப்பெண் உங்களது சகோதரியாக அல்லது உங்களது உறவாக இருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? யாராக இருந்தாலும் பலகீனமான பெண்களின் மானங்களோடு விளையாடி அதில் சுகம் காண நினைக்காதீர்கள் நிச்சயமாக நீங்கள் போகுமிடம் நரகம் இறைவனை பயந்து கொள்ளுங்கள் இவைகளுக்கு அப்பால் எமது மார்கத்திற்கும் சமுகத்திற்கும் செய்யும் எமது கடமை இதுதானா என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்


எனவே இந்த விடயத்தில் அந்த ஏமாற்றுப் பேர்வளியை அடையாளங்கண்டு அவனை உலகுக்கு அறிவிப்பதுடன் இவ்வாற செயலை செய்பவர்களுக்கும் தக்க பாடமாக அமையவும் தகவலறிகின்ற தோழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள் எனது ஊர் களங்கமற்றது எனது ஊரவர்கள் களங்கமானவர் இல்லை என்பதை உறுதியாக எத்திவைத்து இதற்கான சரியான ஆதாரங்கள் என்னிடமிருக்கிறது என்பதையும் திட்டவட்டமாக கூறிவைக்கிறேன் இந்த நிகள்வோடு எமது ஊரைச்சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரிகின்ற நண்பர்கள் தங்களது உள்ளக்குமிறல்களை மிகவும் வேதனையுடன் பதிவு செய்தார்கள் அவர்களுக்கு ஆறுதலாகவும் இதனை எத்திவைத்தேன் அனைவருக்கும் எனது வருந்தங்களுடன் நன்றிகள்பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...