இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, May 18, 2012

விபத்தில் மரணம் வீர மரணம்

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜியுன் 

விபத்தில் மரணம் விழிகள் குளமானது 
விம்முகிறது மனம் ஜீரணிக்க முடியவில்லை 
இன்னாரது நட்பெனக்கு மூன்றரைவருடம் 
ஓரறையில் உண்டு மகிழ்ந்திருந்து 
அளவளாவிய தருணங்கள் கண்முன்னே 
நிழல்களாய் எனைத்தொடர்கிறது 


கால ஓட்டம் இத்தனை வேகமாவென
மரணச்செய்தியில் உணர்ந்து நொந்தேன்
வெகுதொலைவு தொடர்பின்றிருந்தும்
பழகிய நட்பினை பரிதாபச்செய்திவந்து
பதைக்கச் செய்கிறது நெஞ்சை


மனிதர்களுக்குப் பல பக்கங்கள்
அத்தனை மனிதர்களின் நிலைகளில்
மரணம் மாத்திரம் நன்றியுடைய பகுதியினை
நினைத்திடச்செய்து உரைத்திடமுடிகிறது


துணைவனைக் காத்திருந்த மனைவிக்கும்
தந்தையினைக் காத்திருந்த பிள்ளைகளுக்கும்
பிரிவின் துயர்நீத்திட எதிர்பார்த்திருந்த
உறவுகளுக்கும் புகைப்படவாயிலாக
மரணத்தின் தரிசனம் அனைத்திலும் கொடுமையானதுஆங்காங்கு ஆழுத மனங்களுக்கு
இறையருளும் இயல்பு நிலையும் ஆறுதலாகட்டும்
அன்னாரின் அடைவுகளுக்கு இறைவன்
சுவனத்தினை பரிசளித்திடட்டும்
இன்நிகழ்விலும் பாடம் பலர் கற்றிடட்டும்


தேவைகள் நிறைந்தும் திருப்திகாணத்தெரிவதில்லை
அடைந்ததைக் கொண்டு அகம் நிறைவதில்லை
ஒன்றிருந்தால் பத்திற்காசை
பத்திருந்தால் நூறுக்காசை
இச்சையின் பாதையில் இழப்புகளின் வரவேற்புகள்


இறைவனை மறந்த இன்பங்கள் தேடாது
அற்ப வாழ்வில் அயராத நண்மைகளுடன்
அகிலத்தில் சிறந்து அடைவது சுவனமாகிட
தேர்ந்திடும் பாதை நேர்த்தியாகட்டும் 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Anonymous said...

அன்புத் தோழரின் மறைவுக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்! நண்பரின் துயரில் யாமும் ப்ங்கு கொள்கின்றோம்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...