இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 8, 2012

விலைவாசியா..கொலைவாசியா ??


முன்னேற்றமற்ற பணப்பெறுமதியில் 
வீழ்வது மக்களாகிறது 
வருமானத்திற்கு வழியற்று 
விலை ஏற்றத்தில் முழ்கின்றனர் 


உலகப்பொருளாதாரத்துடன் 
கையேந்தும் நிலையில் 
யாசகத்திற்கும் வழியற்ற 
பொருளாதாரப்பின்னடைவு 


பெறுமதியற்ற ரூபாவினால் 
அத்தனை பெருட்களும் அயலவரிடம்
கொள்வனவில் குறைவின்றி 
விற்பனைக்கு ஏதுமற்று 
திண்டாடுகிறது நாடு தீர்வுக்கான படலத்தில் 
உண்ணும் உணவில் கைவைத்து 
இன்னும் பசித்திருக்கப் பாடம் 
புகட்டுகிறது அரசு 


விலைவாசி கொலைவாசியாய் மாறி 
வறுமைக்குமேல் வறுமை சேர்த்து 
வாழ்வதற்கு வழி தேடும் 
நிரந்தரத் தீர்வை உறுதி செய்கிறது 


பகுத்தறிவை பலநாக்கி 
உள்ளதெல்லாம் உற்பத்தியிலாக்கி 
வீழும் நிலை துறந்து வென்றிட 
இன்றே முயற்சியை ஆயுதமாக்குங்கள் 
பசியின்றாவது வாழ்ந்திடலாம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் சார் ! வாழ்த்துக்கள் !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...