இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, May 2, 2012

தவறுக்குத் தவறு நாம் செய்வதா...???அன்பார்ந்த தோழர்களே......காலத்திற்குப் பொருத்தமான ஒரு விடயத்தினை தங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலே நான் இட்டிருக்கின்ற புகைப்படங்கள் பரவலாக சமுக தளங்களில் உலவக்காண்கிறோம் இது முற்றிலும் எமது மார்கத்திற்கும் சமுகத்திற்கும் மாறுபட்ட விடயமாகும் இவர்களை பழிவாங்குகின்றோம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் தவறிழைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் தவறுகளை இவ்வாறு நாம் இழிவு படுத்தி பழிதீர்க்கலாகாது காரணம் எமது மார்கத்தினைச் சேர்ந்தவர்கள் இவர்கள், இவர்களை எமக்குப் பிடிக்காவிட்டாலும் இவர்களை நேசிப்பவர்களும், இவர்கள் பிரதிநிதித்துப்படுத்தும் எம் சமுகத்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காகவாவது இவ்வாறான விடயத்தினை தவிர்ந்து கொள்ளுதல் சிறப்பாக அமையும் குறிப்பாக பேஸ்புக் நண்பர்கள் இவற்றை மீண்டும் மற்றவர்ளுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் 


நடந்தேறிய(தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு) முஸ்லீம் சமுகத்திற்கு எதிரான நடவெடிக்கைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாத இந்த காலகட்டத்தில் இருக்கின்ற அத்தனை முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஆதரிப்போரை ஒரே கொடியின் கீழ் திரட்டியேனும் எமக்கான தீர்வுகளை எட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான உங்கள் உழைப்புகளைச் செய்யுங்கள்.காலம் எமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தந்திருக்கிறது மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களின் காலத்தில் ஒரே அணியில் இருந்தமையால்தான் பலதடவை அரசியலில் பல சாதனைகளை எம்மால் நிகழ்த்திக் காட்ட முடிந்திருந்தது ஆனால் அது இன்று சாத்தியமற்ற நிலையில் மேலும் மேலும் பிரிவினைகளையோ கசப்புணர்வுகளையோ எம்மால் விழைவித்திடலாகாது எதிர்காலம் எமது சந்ததியினருக்குரியதாக மாற்றவேண்டுமானால் எம்மாலான ஓர் எழுத்திலாவது அதை செய்திடல் சாலச் சிறந்ததாக அமையும் என நான் நம்புகிறேன் நண்பர்களே 


இது மாத்திரமல்லாது பரவலாக காணும் விடயங்களில் மார்க்க சம்பந்தமான அனாகரீகமானவற்றை நாமே மற்ற சமுகங்களுக்கு காட்டித்தரும் விதமாக பகிர்ந்த வண்ணமிருக்கிறோம் உதாரணத்திற்கு எமது மார்கத்தில் கூறப்பட்டிருக்கின்ற பெண்களுக்கான ஆடை பற்றியும் எம்மவர்கள் செய்யும் சிர்க்கான விடயங்கள் பற்றியும் நாமே மாற்று சமூகத்தவருக்கு எம்மவர்களை இழிவு படுத்தும் விதமாக பகிர்வு செய்த வண்ணமிருக்கிறோம் நாம் இங்கு இவைகளை செய்வதால் எந்தவித மாற்றமும் ஏற்றட வாய்ப்பில்லை இதற்கு மாற்றமாக செய்பவர்களை அணுகி அவர்களுக்கு இது தவறு என்பதை உணர்த்தி ஒரு நபரையேனும் திருந்தச் செய்வோமானால் அதுவே மிகவும் பொருத்தமாக அமையும். இவ்வாறான விடயங்கள் எம்மைச் சூழ இடம் பெறுகிறது எம்மைச் சார்ந்தவர்கள் செய்கிறார்கள் முதலில் அங்கு கைவைத்து ஒவ்வொருவராக திருத்த முயற்சித்தாலே நாளடைவில் மாற்றத்தினை எம்மால் அடைந்திட முடியும் முயற்சிப்போமா..........


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...