வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு
புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்
யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்
என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்
பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை
4 comments:
நண்பரே அந்த படம் பார்த்தவுடன் மனதில் ஏதோ ஒரு விட கணம்
படிப்போர் மனமும் காயப்படுகிறது..
NALA KAVITAI NANBA....
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை //
மனமிருந்தும் இயலாமை.. அதிகபட்சம் ஒரு குடும்பத்தை காப்பாத்தலாம்.. :(
அரசோ இலவசம் னு மக்களை ஏமாத்துது..வாழ வழி செய்யாமல்..
Post a Comment