இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 23, 2011

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை 
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு 
தலை சாய்கிறது மனம்


தவறிழைக்காத மனிதமுண்டோ 
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??


தவறென்று மனதுக்குப் புரிந்திடாத 
காதல்வலையில் சிக்கியதால் 
எதிர்ப்பலைகளில் தோற்று  
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று 
பக்குவமும் மனதுக்களித்து 
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த 
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள் 


கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு 
இளைத்த தவறை இயல்பென்றுரைத்து 
சந்தேகக் கோடாரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய் 


தூயவளாய் நானிருந்தும் 
துணைவன் வழி நடந்திருந்தும் 
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு 
நானெப்படி உணர்த்திடுவேன்


அழுகின்ற மனதோடு 
அழமட்டும் முடிகிறது 
தவறுக்குத் தவறுசெய்யும் 
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தப்பு செய்தவன் திருந்த பார்க்கனும்
தவறு செய்பவன் வருந்தியாகனும்...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...