பார்..... பார் மகளே பார் ..!
பார் முழுதும் பரந்து கிடக்கும்
படிப்பினைகளைப் பார்
உலகமது நிரந்தரமற்ற பயணம்
இருள் சூழ்ந்த பாதையில்
பலதிசையும் கண்திறந்து பார்
தேவைகளை நிவர்த்திக்கும் நாயன்
அல்லாஹ்விடமே கையேந்தி
அனைத்தையும் பெற்றிடப்பார்
எம்மைக் குறையின்றிப்படைத்த
உலகத்து வல்லோனுக்கே - என்றும்
நன்றிக் கடமையுடன் பார்
பண்பானவர்களின் மத்தியில்
பக்குவமான பாசத்துடன்
நடந்து கொள்ளப்பார்
