மகளீர் மாணிக்கங்களை
காத்திடப்பிறந்தவள் நான்
மாதர் குலத்துக் கற்புகளுக்குப்
பாதுகாவலும் நான்
என் கண்மணிகளின் தேகத்தை
மேயவரும் கண்களுக்கு எதிரியானவள்
பார்வைச் சிறைபிடிக்கப்படும் மாதுகளின்
தேகத்தை விடுவிப்பவளும் நான்
எங்கே திறந்து கிடக்கிறதென்று
ஊர்ந்து வரும் கண்களுக்கு
என்னைக் கண்டமாத்திரத்தில்
ஆத்திரம் கொண்டதைக் கண்டிருக்கிறேன்
அழகு சாதனங்களுக்கென கிரயங்களும்
விரயமற்ற நேரங்களுமென
என்னால் என் அரசிகளுக்கு
எப்பொழுதும் வீண் விரயங்களில்லை
கண்களால் கற்பழிக்கப்டாத
உடல் நெளிவுகளின் அழகினை
உரியவனிடமே முழுதாய் ஒப்படைத்திட
முழுக் காரணி நானாகிறேன்
பாவியவன் எப்படியென்னை பார்க்கிறானென
எத்தனை பெண்களங்கு என்முன்னே
முணங்கியபடி நடக்கின்றனர்
நிருபிக்க முடியாத அனாச்சாரங்களுக்கு
வழிசெய்து அகமழுகின்றனர்....
அவர்களது ரசனைக்குத் தீயிட்டு
அரக்க குணத்திற்கு அணையிட்டவளென்று
என்னால் பாதிப்புற்றோர்தான்
என்னைப்பற்றி கேவலமாக உரைக்கின்றனர்
ஆடைக்கு விடுதலை கொடுத்து
சுதந்திரம் கிடைத்த தென்று
மார்பு தட்டும் மாந்தர்களே
ஆடைக்குள் அடங்கிக்கொண்டு
கற்பினைக் காத்திடுங்கள்....
அன்னை பர்தாவின்
அயராத உழைப்பென்றும்
அகற்றிட முடியாததென்று
அங்காங்கு உணர்ந்து என்னுள்
அடைக்கலம் கொண்டவர்களுக்குத் தெரியும்
எனது வெற்றியின் மகிமை.....
சின்னஞ்சிறுவர் முதல்
முதியோர் அனைவரும்
முழுதாய் எனை ஏற்றுடுங்கள்
என் கரம் பற்றி நடந்துகொள்ளுங்கள்
நாளை சுவனம் சுவித்திடுவீர்கள்......
3 comments:
வரிகளில் நல்ல கருத்துக்கள்...
நன்றி...
its nice
மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!
Post a Comment