இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, November 11, 2012

மதம் திறந்தொரு காதலா...???

வாழ்க்கைக்காய் காதலித்து 
காதலுக்காய் யாவும் துறந்து 
கால் பதிக்கின்ற காதலர்களே 
உம் கால்கள் தடுமாறுவதேன்

அத்தனையும் மறந்ததொன்றும் 
அதிசயமில்லை காதலுக்கு 
படைத்த இறைவனையும் மறக்கின்ற 
உம் அற்பக் காமத்தையா 
காதலென்கின்றீர்கள் .....

தாய் தந்தை துச்சமுங்களுக்கு 
பிறந்து உமை வளர்த்த சமுகம்
துச்சமுங்களுக்கு இருந்தும் 
படைத்த இறைவனுக்கு 
அச்சமில்லையா உங்களுக்கு??



உம் இளமைக் காமத்திற்காய் 
கோடிகோடியாய் இணையும் 
தியாகிகளின் மார்கத்தை விட்டகன்ற 
உங்களின் மடமையைக்கு 
கொழுந்து விட்டெரியும் நெருப்பினை 
உறுதியாக்குகின்றீர்களே...... 
இந்தக் காதலுமைக் காத்திடுமா???

காதலொன்றும் பாவமில்லை 
பாவியான உங்களால் காதல் பாவமாகிறது 
உம் முதற்காதல் இறைவனுக்காகி 
உலத்தின் ஆசைகளைக் காதலித்துப்பாருங்கள்  
ஈருலக வெற்றியாளரில் முதன்மையாவீர் 

காதலுக்காய் தியாகம் எதுவானாலும் 
எற்கின்ற மனங்கள் 
மதமாவதை ஏற்கமுடிவதில்லை 
அதுவே உமை அழித்திடும் 
உணர்ந்துகொள்ளுங்கள் உயர்ந்திடலாம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Anonymous said...

அழகிய கவிதை!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்... அனைவரும் உணர வேண்டும்...

Anonymous said...

Proud of the mother of the boy.
She never ever asked the girl to convert. An icon, even in her poverty. Salute.

Anonymous said...

Love does not (and need not) care about religion. Oppressed minds cannot be controlled for long. Long live the couple.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...