பணந்தான் வாழ்வென்று
பகட்டு வாழ்விற்காய்
துறந்த நாடு பிரிந்த வீடென
நகர்த்திய வாழ்வு
பிரிவின் ஆரம்பத்துடன்
தனிமையின் தவிப்புடனும்
தேடலின் ஏமாற்றத்துடன்
பரிதவிக்கும் வாழ்வு
அடைவதில் திருப்தியற்று
அடைந்தவைகள் மீதமற்று
ஏனிந்த வாழ்க்கை என்ற
கேள்விகளே வாழ்வு
அம்மாவின் அழுகை
பிள்ளைகளின் ஏக்கம்
தினம்தினம் எதிர்பார்க்கும்
தித்திப்பில்லா வாழ்வு
காதல் மட்டும் மனதுடன்
அத்தனை துன்பங்களும்
திருமணத்தால் அனுபவித்து
துறவறமான வாழ்வு
தெரிகிறது இன்பமாய்
தேடுவதும் இன்பத்துக்காய்
அடைவது துன்பமாகி
வாழ்நாளை அழிக்கின்ற வாழ்வு
ஏதுமில்லா வாழ்வாகினும்
ஏனையோரின் வாழ்வுக்காய்
ஏழையாய் தானிருந்து
ஏணியாகும் வாழ்வு
2 comments:
simply super.
குடும்பத்தை பிரிந்து பொருளீட்டப்போய் இருக்கும் குடும்பத்தலைவனின் பொருமலை அழகிய கவிதையாக வடித்துள்ளீர்கள்//ஏதுமில்லா வாழ்வாகினும்
ஏனையோரின் வாழ்வுக்காய்
ஏழையாய் தானிருந்து
ஏணியாகும் வாழ்வு //
நிஜம்தான்.ஏணியாக இருப்பதில் கூட ஒரு சுகம் உண்டல்லவா?வாழ்த்துக்கள்!!
Post a Comment