காதலெனும் புனிதம்
காதலெர்களால் கெட்டுவிடுகிறது காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது
விழுந்து விழுந்து
காதல்வலை வீசியதில்
காதலுக்கே ஹீரோவென்று
கானமங்கு இசைக்கிறது
கண்டதும் முத்தம்
கை பட்டதும் அணைப்பு
தொட்டதும் ஈர்ப்பு
தொடர்ந்ததும் அனுபவிப்பு
மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறது
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது
காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது
ஒத்துவராத காதலென்று
சாதாரணமாய் குட்பாய் சொல்லி
இன்னுமோர் புனிதனுக்கு (வளுக்கு)
துரோகமங்கு தயாராகிறது
காதலுக்கொரு காணிக்கையாய்
தொடுகையற்ற காதலோடு
மதிப்பளிக்கப்பட்ட உணர்வுகளை
இருமனமாற திருமணத்தில்
அனுபவித்துப்பாரங்கு நீ வாழத்துடித்திருப்பாய்
1 comments:
ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி...
Good one...
Post a Comment